Share

கூட்டத்தில் ஒருத்தன் விமர்சனம்

a K.Vijay Anandh review

வீட்டில் மூத்தது கவனிக்கப்படும், இளயதும் கொண்டாடப்படும் , ஆனால் இந்த நடுவுல பொறந்தது இருக்கே அது பாடு திண்டாட்டம் தான்.

அதே தான் பள்ளி, கல்லூரிகளிலும் ஆசிரியர்களின் செல்லப்பிள்ளைகளாக முதல் வரிசை மாணவர்கள், ஆசிரியர்களே அடக்க முடியாதவர்களாக கடைசி வரிசை மாணவர்கள், அட இவய்ங்க நம்ம வகுப்பு தானா என்று தெரியாத அளவிற்குத்தான் நடுவுல மாட்டிக்கொள்றவய்ங்க…

அப்படி, மாட்டிக்கொண்ட அசோக் செல்வன், பின் பிபிசி வாயிலாக கூட்டத்தை மட்டுமல்ல குடும்பத்தையும் கவனிக்க வைத்து இழந்த பாசத்தையும் காதலியையும் மீட்கிறார்.க

  கே.பாலசந்தர்,பாலுமகேந்திரா இயக்கிய அந்தக்கால கமல்ஹாசன்         மாதிரி,  அசோக் செல்வன். பேபர்ல படிச்சோ, டிவில பார்த்தோ மற்றவர்கள் பசியாற்றக் கிளம்பவில்லை. காதலியிடம் கற்றுக் கொண்டதையும் தான் அனுபவித்த பசிக்கொடுமை தந்த பாடத்தையும் வைத்து, பலரின் பசியாற்றக் கிளம்புகிறார்.

பிரியா  ஆனந்த்,  சிவகார்த்திகேயனை எதிர் நீச்சல்.போட வைத்தவர்,அசோக் செல்வனை கடல் நீச்சல், அதாவது வாழ்க்கை எனும் கடலை அசால்ட்டாக நீந்திக் கடக்க வைத்திருக்கிறார். பிரியா ஆனந்த் இன் அறிமுகம், அதுவும் அதே காட்சியில் அசோக் செல்வனுடன் அறிமுகமாகும் காட்சியமைப்பும் அற்புதம். அட, மாநிலத்தில் முதலிடம் பிடித்தால் பத்திரிக்கையாளர் ஆகக்கூடாதா என்ன..? ஞானவேலின் நற்சிந்தனைக்கு பாராட்டுகள்.

மகனுயிர் காத்த அசோக் செல்வனுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற சமுத்திரக்கனியின் ஆத்மார்த்தமான ஆசையே அசோக் செல்வனுக்கு ஆப்பும் வைத்து விடுகிறது.

பால.சரவணின் நகைச்சுவை நன்றாக வேலை செய்கிறது.

அசோக் செல்வனை, நால்வரிடம் போட்டுக் கொடுக்கும் சஞ்சய் பாரதிக்கு ஒரு டயலாக் சேர்த்திருக்கலாம், ” இதுவும் ஜர்னலிஷம் தான், இன்வெஸ்டிகேட் ஜர்னலிஷம் அதாவாது புலனாய்வு பத்திரிக்கையாளன்..” என்று முடித்திருக்கலாம்.

தியேட்டர்களில்.கூட்டம் அலைமோதினால் தயாரிப்பாளருக்கு வெற்றி. படம்பார்த்த கையோடு ஒரு பார்சல் வாங்கிட்டுப் போய் பசியோடிருப்பவருக்குக் கொடுத்தால் அது படைப்பாளிக்கு வெற்றி!!

இரண்டு வெற்றியையும் கொடுக்கத் தகுதியான படமாக கூட்டத்தில் ஒருத்தன்!