Share

விக்ரம் வேதா விமர்சனம்

a K.Vijay Anandh review

ஜி எஸ் டி,டிக்கட் விலை உயர்வு எதைப்பற்றியும் கவலைப்படாமல்,  படத்தின் தரத்தை நம்பி வெளியான படம். தயாரிப்பாளரின் நம்பிக்கை காப்பாற்றப்படும், பட்டது.

மாதவன், விஜய் சேதுபதி இருவருக்குமே மிகச்சமமான கதாபாத்திரங்கள். முன்னவர் தோட்டாவால் என்கவுண்டர் செய்கிறார் என்றால் பின்னவர் கேள்வியால் என்கவுண்டர் செய்கிறார், மாதவனை.

உயரதிகாரியின் கட்டளையை நிறைவேற்றச் சுடுகிறார்கள், உடன்பிறந்த வனை இழந்த விரக்தியில் விஜய்சேதுபதி , கெத்தாக போலீஸ் நிலையம் வந்து சரணடையும் அந்த ஒரு காட்சி , ஒரு சோற்றுப் பதம்.

பிரேம், ஜார்ஜ் விஜய் நெல்சன் மிகவும் யதார்த்தமான என்கவுண்டர் போலீசாக வந்திருக்கிறார்கள் என்றால், இ ராமதாஸ் தன் பங்குக்கு சீனியர் போலீஸ் ஆபிசராக கண்முன் நிற்கிறார்.

ஸ்ரத்தா ஸ்ரீநாத் கெளதம் கார்த்திக்குக்கும் பொருந்தும் நாயகி, மாதவனின் மனைவியாகவும் நம்ப வைக்கிறார். வக்கீல் பாத்திரத்திற்கே உரித்தான கெத்து காட்டி ஜெயிக்கிறார்.

வழக்கமான கதை போலத்தோன்றினாலும் நடிகர்களும் தொழில் நுட்பக் கலைஞர்களும் புது அனுபவத்தைக் கொடுத்து விடுகிறார்கள்.

குறிப்பாக, கடைசி வரை விறைப்பாக இருக்கும் மாதவனாகட்டும், கோட்டுக்கு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று மியாந்தத் மாதிரி குரங்குச் சேட்டை காட்டும் விஜய்சேதுபதியாகட்டும், , புல்லி கதிர், வரலட்சுமி ஆகட்டும் தனித்தனியாகக் கவனிக்க வைத்து விடுகிறார்கள்.

சாம் சி.எஸ்ஸின் இசையும் , பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவும் படத்திற்குப் “பக்கா” பலம்.

நிறைய ஷுட்ஸ் தான் என்றாலும் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச சண்டைக் காட்சிகளைச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் திலீப்.

சசிகாந்தின் நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறார்கள் புஷ்கர் – காயத்ரி.