Share

எந்த நேரத்திலும் விமர்சனம்

a K.Vijay Anandh review

நாயகன் ராமகிருஷ்ணன் என்றாலும் படத்தின் இரண்டாம் பாதியைத் தூக்கிச் சுமந்திருப்பது நாயகி.லீமா பாபுவும் ராமகிருஷ்ணனின் அக்காவாக வரும் சாண்ட்ரா உம் தான்.

மிக மிக எளிமையான நடிகர்களை வைத்துப் பேய்ப் படம் கொடுத்து பயமுறுத்தி ஜெயித்திருக்கிறார் இயக்குநர் ஆர்.முத்துக்குமார்.

கல்லூரிப்பெண்ணாகவும் , தோட்ட வேலை செய்பவராகவும் பெரிய ஒப்பனை வேறுபாடு இல்லாவிட்டாலும் – அத்துடன் கொஞ்சம் நேரம் பேய் மேக் அப்பிலுமாக மூன்று கெட் அப்புகளிலும் ஜொலிக்கிறார் லீமா.

பயமுறுத்துவது எளிது, பயப்படுவது போல நடிப்பது கடினம். பிளாஷ்பேக்கில் வில்லிதான் என்றாலும், தன் மகள் உடம்பில் ஆவி புகுந்து ஆட்டிப் படைக்கும் போது நிஜமாகவே அவரும் அலறி பார்ப்பவர்களையும் அலற வைத்திருக்கிறார் சாண்ட்ரா எமி. பேயாக ஆட்டுவிக்கும் தன் மகளைப் பார்த்து அலறும் அவர்,மகள் உடம்பிலிருந்து பேய் வெளியேறியவுடன் மயக்கமடைந்து விழுந்த மகளைத் தாயாக மடியில் கிடத்திக் கொள்ளும் அந்த காட்சி அருமை.

தயாரிப்பாளர் அரிமா என். இராம லிங்கத்துக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் கொடைக்கானல் குளிரிலும் திகில் காட்டியிருக்கிறார் ஆர்.முத்துக்குமார்.