Share

பப்ளிக் ஸ்டாரின் காளியாட்டம்

ராமர் , பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ‘வருண் ஆதிராஜா .  பப்ளிக்ஸ்டார் நடிக்கும் காளியாட்டம் எனும் படத்தை மிகுந்த  பொருட்செலவில் பிரமாண்டமாக இயக்கி .வருகிறார்.

கிங் பிரதர்ஸ் சார்பில் R.K..அயோத்தி  தயாரிக்கும் இப்படத்தில்
பப்ளிக்ஸ்டார் கதாநாயகனாக நடிக்க  – நாயகியாக  சமீரா நடிக்கிறார். இவர்களுடன் அனைத்து கதாபாத்திரங்களிலும் 50க்கும் மேற்ப்பட்ட புதுமுகங்கள்  அறிமுகமாகிறார்கள்.

ரவுடிகளின்  ஆதிக்கத்தை அடக்கும் போலீஸ்     , போலீஸை மிரள வைக்கும் ரவுடிகள்  – இவர்களின் போராட்டத்தை முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமான முறையில் உருவாகிறது இப்படம் .

E.J.நௌட்ஷா  ஒளிப்பதிவு செய்ய  இசையமைக்கிறார்  பிரசாத் நிக்கி.

இப்படத்தின்  முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் 40 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து பொள்ளாச்சி , கோவை, ஊட்டியில் நடைபெறுகிறது .