Share

ரசிகரா இருந்து தொண்டரா மாறுங்க – பார்த்திபன்

பார்த்திபன் என்றாலே சர்ச்சை தான். மனிதர் ஏதேச்சையாகப் பேசுவதில் கூட பல அர்த்தங்கள் கண்டுபிடித்துவிட முடியும்.

உதயநிதியுடன் இவர் நடிக்கும் பொதுவாக எம்மனசு தங்கம் நிகழ்ச்சியில் , பத்திரிக்கையாளர்கள் இவர் வாயைக் கிளர, ” கமல் அரசியலுக்கு வருவதைப் பற்றி அவரிடமே கேட்டு விடலாம்… ரஜினி அரசியலுக்கு வருவது பற்றியென்றால் அவர் கூறும் ஆண்டவனைத்தைத் தான் கேட்டுச் சொல்லவேண்டும்..” என்று அவர் பாணியிலேயே பதில் சொல்ல, தலைவரைக் கிண்டல் செய்கிறார் என்கிற ரீதியில் பூகம்பம் கிளம்பியிருக்கிறது.

இதற்கு விளக்கம் கொடுத்துள்ள பார்த்திபன்,” எனக்கு முதல் படம் வாய்ப்பு கிடைக்கக் காரணமாக இருந்ததே ரஜினி தான்… கமல் – ரஜினி இருவருமே என் நண்பர்கள் தாம்… அரசியலுக்கு வந்தால் இருவரையுமே வரவேற்பேன்… அதே நேரம் பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள் யாராயினும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல… ரஜினி ரசிகர்கள் இன்னும் ரசிகர்களாகவே இருப்பதால் உணர்ச்சிவசப்படுகிறார்கள்,  தொண்டர்களாக மாறவேண்டும்..” என்று கூறினார்.

அத்துடன் நீண்ட  நாள் எதிர்பார்த்த அந்த நாள் வரவேண்டும் என்று “ஆண்டவரை..” வேண்டிக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.