Share

உண்மையான மீடியாக்களை நம்புங்கள் – ஜீவா

நம்ம விவசாயம் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா, “சமூகவலைத் தளத்தில் பரப்பப்படும் வதந்திகளைக் கண்ணக் மூடிக்கொண்டு அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் பரப்பிக் கொண்டிருக்காமல், அதிகாரப்பூர்வமான செய்தி ஊடகங்களை மட்டுமே பின்பற்றுங்கள். எனக்கு விவசாயம் பிடிக்கும் ஆனால், நிலம் வாங்கி விவசாயம் செய்ய இயலவில்லை. அதனால் விவசாயம் சார்ந்த எல்லா விஷயங்களிலும் என்னை இணைத்துக் கொள்கிறேன்…

காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவதும், இலவசங்களுக்கு ஆசைப்படுவதுமே இந்த இழிநிலைக்குக் காரணம்..  நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சிக்கு அனுப்புவோம்…

பனைமரமே வாடுகிறது என்றால், நாம் விழித்துக் கொள்ள வேண்டும்…

விவசாயமும் சினிமாவும் ஒன்று… அங்கே விதை இங்கே கதை, விவசாயத்திற்கும் நேரடியான வெளிப்படையான வியாபாரம் இல்லை… சினிமாவிலும் அப்படியே…

நிறைய விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை விற்று படம் எடுத்திருக்கிறார்கள்… இப்பொழுது நாம் அவர்களுக்கு ஏதேனும் திருப்பிச் செய்யவேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.