Share

தியேட்டரில் படம் பார்ப்பவர்களே சினிமாக்காரர்கள் – ஆனந்த்ராஜ்

தான் சம்பாதிக்கும் பணத்தில் டிக்கெட் எடுத்து திரையரஙகில் டிக்கெட் எடுத்து படம் பார்த்து திரைப்படத்துறையை வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் உண்மையான சினிமாக்காரர்கள் என்று  ஆனந்த் ராஜ் தெரிவித்தார்

கதாநாயகன் பட விழாவில் “நாயகன் படத்தை ஆரம்பித்ததும்.முக்தா சீனிவாசன் தான். அவரைத் தொடர்ந்து பாண்டியராஜன் – எஸ்.வி.சேகரை வைத்து கதாநாயகன் படம் எடுத்தார் , அதுவும் வெற்றிப்படம். மீண்டும் கதாநாயகன், 20 வருடங்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் எடுத்திருக்கிறார்… இந்தக் கதாநாயகனும் ஜெயிப்பான்..” என்றார் ஆனந்த்ராஜ்.

“நாங்களெல்லாம் சினிமாக்காரர்கள் கிடையாது… காசு வாங்கிக் கொண்டு நடிக்கும் கலைஞர்கள். 300 ரூபாய் சம்பாதித்து விட்டு 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தான் உண்மையான சினிமாக்காரர்கள்..” என்று மேலும் தெரிவித்த ஆனந்த்ராஜ் முதன் முதலாக துபாய் ஷேக் ஆக நடித்திருக்கிறார்.