Share

வாசிங்கண்ணே தூங்கனும் – முருகானந்தம்

பொதுவாக, முதல் படத்திற்கு இசையை வாங்க இசையமைப்பாளர்களைத் தூங்க விடாமல் மெட்டு வாங்குவார்கள் இயக்குநர்கள். ஆனால், நகைச்சுவை நடிகராகவும் நகைச்சுவை படத்தை இயக்கி இயக்குநர் பயணத்தை ஆரம்பித்திருப்பவருமான முருகானந்தம், ஷான் ரோல்டனை   மெட்டுப் போடச்சொல்லிவிட்டு அவர் அலுவலக சோபாவிலேயே படுத்து உறங்கியிருக்கிறார். சீன் ரோல்டனிடம் அவ்வளவு நம்பிக்கை, அதனைக் காப்பாற்றியிருக்குறார் ஷான்.

கதாநாயகன் பட விழாவில்     இந்தச் சம்பவத்தை ஜாலியாகப் பகிர்ந்து கொண்டார் முருகானந்தம்.

கவுண்ட மணி தவில் வாசிக்க, நாதஸ் செந்தில் தூங்கும் காட்சி நினைவிற்கு வந்தால் கம்பெனி பொறுப்பாகாது.