Share

இப்போ ரொம்ப பிசி – விஷ்ணு விஷால்

Vishnu Vishal Studioz , Fox star studios உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் கதாநாயகன்.

விஷ்ணு விஷால், கேதரின் ஜோடியுடன் சூரி, ஆனந்த்ராஜ், சரண்யா பொன்வண்ணன், அருள் தாஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வெண்ணிலா கபடி குழுவில் விஷ்ணு விஷாலின் நண்பனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்த விஜய்சேதுபதி நட்புக்காக இந்தப் படத்திலும் ஒரு முக்கியமான  கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிகேபி, ரவி ஜி, முருகானந்தம் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஷான் ரோல்டன்.லக்‌ஷ்மன் ஒளிப்பதிவில் திரையிடப்பட்ட கதாநாயகன் படப்பாடல்கள் கலர்ஃபுல்லாக இருந்து புதிய விஷ்ணு விஷாலை காட்டின என்றால் அது மிகையாகாது.

செண்டிமெண்ட்ஸ் நிறைந்த ஜாலியான படம் என்றார் சரண்யா பொன்வண்ணன்.

முழுக்க முழுக்க பொழுதுபோக்கு வகைப்படமான கதாநாயகன் – இந்த வகைப்படங்களுக்கு ஒரு பெரிய வரவேற்பைப் பெற்றுத்தரும் என்றால் படத்தின் இணைத்தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான லக்‌ஷ்மன்.

“ அண்ணாத்துரை – தம்பித்துரையாக விஷாலும் நானும் நடித்திருக்கிறோம். இந்தப் படத்தில் ,  எங்கள் நகைச்சுவை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்..” என்றார் சூரி. இயக்குநர் முருகானந்தத்திற்கு நகைச்சுவை நன்றாக வருகிறது, அவரே விட்டாலும் நகைச்சுவை இனி அவரை விடாது என்று மேலும் தெரிவித்தார் சூரி.

“நான் மணிவண்ணன் மாதிரி இருக்கிறேன் என்று படத்தில் நடித்த மூத்த கலைஞர்கள் சொல்லும் போது நெகிழ்ந்தேன்..” என்றார் இயக்குநர் முருகானந்தம்.

“வருடத்திற்கு ஒரு படம் நடித்தால் போதும் என்று இருந்த என்னை வருடத்திற்கு நான்கு படம்  நடிக்கத் தூண்டிய படம் கதாநாயகன..”் என்றார் விஷ்ணு விஷால்.