Share

செட்டா இருந்தாலும் அது மதுரையா இருக்கனும்

விஷால்   பிலிம்   பாக்டரி (VFF) தயாரிப்பில் புரட்சி தளபதி விஷால் நடிக்க இருக்கும் 25-வது படம் சண்டைகோழி -2.

அப்படத்திற்காகப் பிரம்மாண்டமான செட்  போடப்படவுள்ளது. சென்னை  பின்னிமில்லில் 10எக்கர் நிலபரப்பில்   500கடைகள், கோவில் திருவிழா கொண்டாட்டத்திற்காக என்று நிர்மாணிக்கப்படும் இந்த அரங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், அரங்கில் நுழைந்துவிட்டால் மதுரைக்கு வந்துட்டோமா என்று திக்குமுக்காடச் செய்வதுதான்.

ஆம்,  கலை இயக்குநர் ராஜீவன் கைவண்ணத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் இணைந்து இந்த மதுரையை அமைக்க உள்ளார்கள்.   

 விஷால் பிலிம் பாக்டரி (VFF) இணை தயாரிப்பாளர் .M.S.முருகராஜ்,  இயக்குனர் N.லிங்குசாமி மற்றும் கலை இயக்குனர் ராஜீவ்வன் ஆகியோர் கலந்துகொண்டு ஆறு கோடி.ரூபாய் செலவில் அமையவுள்ள அரங்கிற்கு அடிக்கல் நாட்டினார்கள்.

சண்டைக் கோழி படம் விஷாலை ஆக்‌ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்திய படம். சண்டைக்கோழி 2 இல் இன்னும் சிறப்பாக ஆக்‌ஷன் இருக்குமாம், ஆக்‌ஷன் இருக்கனும்னா அது மதுரையா இருக்கனும், அட, செட்டே என்றாலும் அது மதுரையா இருக்கனும்!