Share

விரைவில் கிடா விருந்து, திரையரங்குகளில்

பிரகாஷ்  நாயகனாக நடிக்க, தமிழமுதன், செல்வராகவன் எழுதிய பாடல்களுக்கு பிரின்ஸ் நல்லதம்பி இசையமைத்திருக்கும் கேபிஎன் பிலிம் மீடியா   கே.பி.என்.மகேஷ்வர் தயாரித்து, தமிழ்ச் செல்வன் இயக்கியிருக்கும் கிடா விருந்து படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில்  கேயார்,  பெப்சியிலிருந்து ஆர்.கே.செல்வமணி, சண்முகம் ஆகியோருடன் ஜாக்குவார் தங்கம், விஜயமுரளி,  கே.ராஜன், பிக்பாஸ் புகழ் கஞ்சா கருப்பு  உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

” மாயாண்டி குடும்பத்தார் போல, மண்வாசனை மிக்க கிடா விருந்து படமும் பெரிய வெற்றிபெறும்..” என்றார் கே.ராஜன். தினப்படி என்று சொல்லப்படும் பேட்டாக்களை வாங்காமல் சம்பளத்திலிருந்து செலவு செய்யலாமே என்று நடிகர்களைக் கேட்டுக் கொண்டார் கே.ராஜன்.