Share

பொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்

- Nawin Ghanesh

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தளபதி பிரபு இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், சூரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் கிராமத்து நகைச்சுவை? திரைப்படம் தான் பொதுவாக எம்மனசு தங்கம்.

இயக்குனர் பொன்ராமின் உதவியாளர் என்பதைத் தளபதி பிரபு ஒவ்வொரு frameமிலும் நிரூபிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இன்னொரு version தான் இந்த திரைப்படம். இவ்விரு படங்களுக்கும் குறைந்தபட்ச வித்தியாசங்களே கண்டுபிடிக்க இயலும். இது இந்த படத்தின் நிறையா..? அல்லது குறையா..? என்பதை ரசிகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

சூரியின் காமெடி வழக்கம் போலவே மிகச்சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறது, பல இடங்களில் நம் பொறுமையை சோதிக்கின்றது.

 பார்த்திபன் மற்றும் அவரின் கார் ஓட்டுனராக வரும் மயில்சாமி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் கதை நகர்விற்கு உதவியிருக்கின்றன. பார்த்திபன் வழக்கம் போலவே தனது typical onelinerகளால் நம்மை ஈர்க்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் முந்தைய படங்களை விட இதில் நடிப்பு, நடனம், சண்டை ஆகியவற்றில் சிறிது முன்னேற்றம் காண்பித்து இருக்கிறார். நிவேதா வழக்கமான ஹீரோயின்கள் செய்யும் வேலையை கூட செய்யாமல் ஒரு சிறு ஊறுகாய் அளவிற்கே பயன்படுத்தப் – பட்டிருக்கிறார்.

டி. இமானின் இசையில் பாடல்கள் ஒன்றும் மனதில் ஒட்டாமல் கடந்து செல்கின்றன, பின்னணி இசையில் பெரிதாக அவர் ஆர்வம் கட்டியதாக தெரியவில்லை. எனினும் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தை colorfulஆக காண்பித்துள்ளது.

ஊரே ஓட்டுப்போட்டு உதயநிதியைத் தோற்கடித்து ஊரைவிட்டே வெளியேற்றிவிடுகிறது,  இது போன்ற காட்சியமைப்புகள் – வேறு ஒரு பெரிய புறக்கணிப்பிற்கான அறிகுறியாக அமைந்துவிட வாய்ப்பிருக்கிறது!

பொதுவாக எம்மனசு தங்கம், ஆபரணமாக மாட்டிக் கொள்ள இயலாத தங்கம்!