Share

73 ஆண்டு பள்ளியில் 71 ஆவது சுதந்திரதின விழா

காமராஜர் – கக்கன் ஆகியோரின் நெருங்கிய தோழரும், சுதந்திரப்போரட்ட வீரருமான சண்முகசுந்தரம் 1945 இல் திருவல்லிக்கேணியில் நிறுவிய, 73   வருடங்களாகக் கல்விச் சேவையாற்றிக் கொண்டிருக்கும் தேவி நவசக்தி நடுநிலைப்பள்ளியில் 71 ஆவது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் , நடிகரும் ஊடகவியலாளருமான பயில்வான் ரங்கநாதன் மற்றும் டாக்டர் என் சையத் இஸ்மாயில் ஆகியோர்      தலைமை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றினார்கள்.

பள்ளியின் தாளாளர் தேவி நவசக்தி முன்னிலை வகிக்க, டாக்டர் சக்தீஸ்வரி சிறப்பு விருந்தினர்களை    வரவேற்றார்.

கடந்த 70 ஆண்டுகளாகத் தனிச்சிறப்புடன் நடத்தப்பட்ட வரும் தேவி நவசக்தி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி, நிகழ்ச்சியில்   கலந்து கொண்ட அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது என்றால் மிகையாகாது.

IMG_20170815_110308197-800x450