Share

மாடித்தோட்டமைக்க மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரேமலதா

ஸ்ரீ ஆண்டாள் அழகர் இஞ்சினியர் கல்லூரியில் 2017-18 ஆம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான Fresher’s day விழா நடைபெற்றது. இதில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வி.ராமசந்திரன் மற்றும் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசிய  கல்லூரியின் தலைவர்  பிரேமலதா விஜயகாந்த், மாணவர்கள்  ஒழுக்கம் மற்றும் நேர்மையை கடைபிடித்து இலட்சியத்துடன்  படிக்கும் மாணவர்களுக்கு இந்த கல்லூரி  ஊக்கமும் உறுதுணையும் அளிக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இயற்கை விவசாயம்  என்பது  இப்போது எல்லோருக்கும் தேவை   விவசாயமே  அழிந்து வரும் நிலையில் , அதனைப் பற்றிய விழிப்புணர்வினை இளையதலைமுறையினரிடம் ஏற்படுத்தும் விதமாக தனது மாறுவோம் மாற்றுவோம் அமைப்பின் மூலம் பெருமுயற்சி  எடுத்து வரும் ஆரியைப் பாராட்டியதுடன், ஆரி கையிலெடுத்துக் கொண்டிருக்கும் நஞ்சில்லா உணவு –  உணவே மருந்து, மருந்தே உணவு என்கிற முழக்கமும் வெற்றிபெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

மாடித்தோட்டம் மூலம் மாணவர்கள் ஒவ்வொருவரும் இயற்கை விவசாயம் மேற்கொண்டு, நஞ்சில்லா  காய்கறிகளை உற்பத்தி செய்யவேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தினார்.