Share

காதல் கசக்குதையா விமர்சனம்

-Naveen Ganesh

எட்செக்ட்ரா என்டர்டைன்மென்ட் பேனரில் மதியழகன், ரம்யா தயாரிப்பில், துவாரக் ராஜா இயக்கத்தில், தரன் குமாரின் இசையில், துருவா – வெண்பா கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வெளியாகியிருக்கும் காதல் நகைச்சுவை திரைப்படம் “காதல் கசக்குதையா”.

ஒரு IT நிறுவனத்தில் வேலை செய்யும் கதாநாயகர் தன் நண்பர்களுடன் வசித்து வருகிறார், அவரது தாயார் கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் கதாநாயகரை காணும் பள்ளிமாணவியான நாயகி அவரது (புகைப்பிடிக்கும்) அழகில் மயங்கி அவரை காதலிக்கிறாள். முதலில் அவளது காதலை ஏற்றுக்கொள்ள தயங்கும் நாயகர் பின்னர் அவளை காதலிக்கிறார். வழக்கம்போல நாயகியின் தந்தை ரூபத்தில் அக்காதலுக்கு எதிர்ப்பு வருகின்றது. அந்த சம்பவத்தால் அவமானப்படும் நாயகர் அப்பெண்ணை விட்டு விலகிச்செல்ல, அப்பெண் அவனை மறக்க முடியாமல் தவிக்க இறுதியில் அவர்கள் ஒன்றிணைந்தார்களா என்பதே காதல் கசக்குதயாவின் கதையும் காட்சிப்படுத்துதலும்.

நாயகன் துருவா மற்றும் நாயகி வெண்பா இடையில் பூக்கும் காதல் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. கல்பனா நாயகனின் அம்மாவாக நிறைவான ஒரு பங்களிப்பை அளித்துள்ளார். நண்பர்களாக வரும் லிங்கா மற்றும் ஜெய் கணேஷின் காமெடிகள், தெளிவான திரைக்கதை போன்றவை பலமாக இருப்பினும், படம் பார்பவர்களே மூச்சி திணறும் அளவிற்கு நாயகர் துருவா புகைபிடிப்பது (என்ன தான் அவர் கடைசியில் புகை பிடிப்பதை விட்டுவிட்டாலும்) போன்ற  காட்சிகளை குறைத்திருக்கலாம் அல்லது முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம்.

பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக நம் கண் முன் நிறுத்துகிறது, தரன் குமாரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்க்கிறது. மொத்தத்தில் காதல் கசக்குதையாவை அதன் புத்துணர்ச்சிக்காக கண்டு ரசிக்கலாம்.

 

Leave a Comment