Share

பழம்பெரும் நடிகை B.V.ராதா மறைவிற்கு நடிகர் சங்கம் அஞ்சலி

by B.Karthikeyan

1964-ல் ‘நவகோடி நாராயணா’ என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமான “குமாரி ராதா” தாழம்பூ, யார் நீ, காதலித்தால் போதுமா, சி.ஐ.டி.ஷங்கர் உட்பட 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், நாகேஸ்வர ராவ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகையான B.V.ராதா(69) சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்தவர் நேற்று பெங்களூருவில் காலமானார்.

அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

  “எங்கள் நடிகர் சங்கம் உறுப்பினரான B.V.ராதா (membership no:132) இன்று பெங்களூருவில் மரணமடைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம். இறுதி நாள்  நடிகர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து சங்கம் செயல்படுகளை ஊக்குவித்து வந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதோடு அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர்  துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்”

என்றனர்.

Leave a Comment