Share

‘மகிழ்மதி ராஜ்ஜியம்’ சுற்றுலா தளமானது!

by B.Karthikeyan

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர், பலர் நடிப்பில் வெளியான படம் “பாகுபலி”. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி, பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்காக ஹைதெராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில், சாபு சிரில் தலைமையில் சுமார் 1500 பேருக்கு மேல்  மகிழ்மதி அரண்மனை போன்ற பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்க உழைத்தனர்.  படம் முடிவடைந்ததால் அந்த படப்பிடிப்பின் இடத்தை சுற்றுலா தளமாக மாற்றியுள்ளனர்.

mahishmati-1 mahishmati-3

பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ள மகிழ்மதி ராஜ்ஜியத்தை சினிமா ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் கண்டு வருகிறார்கள்.

Leave a Comment