Share

தயாரிப்பாளர்களைக் கட்டுப்படுத்தாதீர்கள் – மாறன்

by B.Karthikeyan

தயாரிப்பாளர் ஜெமினி ராகவா என்பவர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருக்கிறார். அவர் கூறிருப்பதாவது,

“4 கோடிக்குக் கீழ் செலவு செய்து தயாரிக்கப்படும் படங்கள் ஃபெஃப்சியுடன் ஒப்பந்தம் போடாமல், தங்களுக்கு விருப்பப்பட்டத் தொழிலாளர்களை வைத்துக்கொள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

என்றார்.

இது குறித்து சக தயாரிப்பாளர் ‘மாறன் கிரியேஷன்ஸ்’ இளந்திருமாறன்,

“தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் நிலையில், இவர் ஏன் போராடுகிறார்..? அல்லது அப்படி எதுவும் முடிவுகள் எடுக்கப்படவில்லையா..?

இன்னொன்று, 4 கோடி என்கிற வரம்பினை நிர்ணயம் செய்தது யார்..? அது எப்படி சாத்தியம்..? 40 கோடி செலவு செய்த படங்களாக இருந்தாலும் தயாரிப்பாளர் விரும்பினால் அவர் தனிப்பட்ட முறையில் ஃபெஃப்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளட்டும்.

எந்த ஒரு தயாரிப்பாளரையும், அவர் 4 கோடியில் படம் எடுத்தாலும் 40, 100 கோடிகளில் படம் எடுத்தாலும் அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டாம். ஃபெப்சியுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்வதும் , ஃபெப்சி இல்லாமல் படம் தயாரிப்பதையும் அவரவர் விருப்பத்திற்கே விட்டு விடலாமே..”

என்று தனது கருத்துக்களைப் பகிர்ந்து உள்ளார்.

அது.மட்டுமல்லாமல், ஜெமினி ராகவா ஒரு செய்ற்குழு உறுப்பினராக இருந்துகொண்டு, இப்பிரச்சினையை எங்கும் கோரிக்கையாக வைத்து அதற்குத் தீர்வு காண முயற்சிக்காமல், நேரிடையாகப் போராட்டத்தில் குதித்திருப்பது பல சந்தேகங்களுக்கு வித்திடுகிறது என்று தனது அதிருப்தியையும் தெரிவித்த மாறன்,    இந்த விஷயத்தில்   தயாரிப்பாளர் சங்கம் ஏதேனும் முடிவெடுத்திருந்து அது   இவருக்கு முன்பே தெரியுமா..? என்கிற கேள்வியையும்  முன் வைத்திருக்கிறார்.

Leave a Comment