Share

அண்ணாதுரையாக விஜய் ஆண்டனி

by B.Karthikeyan

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இரட்டை குதிரையில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர்  விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து ரசிகர்களை ஆச்சிரியப்படுத்துவார். அவர் தற்போது புதுமுக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் “அண்ணாதுரை” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பு திருவண்ணாமலை, பழனி ஆகிய இடங்களில் நடந்தது.

அண்ணாதுரை”யில் அவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது.

 வசனக்காட்சிகளின்   படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாகவும் கூறப்படுகிறது.

IMG-20170912-WA0004

அண்மையில் வெளியிடப்பட்ட ‘அண்ணாதுரை’ படத்தின் பிரத்யேக முதல் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற தலைப்பில் ரிலீஸாகவுள்ளது. தெலுங்கு சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ சிரஞ்சீவி ‘இந்திரசேனா’ வின் முதல் போஸ்டரை வெளியிட்டு இந்த குழுவினரை வாழ்த்தி தனது நல்லாசியை வழங்கினார்.

‘அண்ணாதுரை’ படத்தை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு சொந்தமான “ஆர்  ஸ்டுடியோஸ்” நிறுவனத்துடன் இணைந்து பாத்திமா விஜய் ஆண்டனியின் “விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்ஸ்” நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

Leave a Comment