Share

அனிருத் ட்விட்டரில் காதல் நீயே

by B.Karthikeyan

இன்றைய இளம் தமிழ் சினிமா ரசிகர்களின் டிரண்டிற்கு ஏற்றார்ப்போல் தன்னுடைய இசையில் அசத்துபவர் அனிருத். அண்மையில் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்திற்கு இசையமைத்து ரசிகர்களின் பெரும் பாராட்டை பெற்றுள்ளார் அனிருத். அவர் தற்போது இளம்  இசையமைப்பாளர் பியான் சரோ இசையமைத்த “காதல் நீயே” ஆல்பத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிடுகிறார். சக்தி ஸ்ரீ, சுசித் சுரேசன் குரலில் உருவாகியிருக்கும்  இப்பாடலில் ஜெகதீஷ் மற்றும் புனிதா கார்த்திக் நடிக்க, பாடல் வரிகளை  எழுதியுள்ளார் ஜெகதீஷ். “காதல் நீயே” ஆலபத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் வம்சிதரன் முகுந்தன்.

Leave a Comment