Share

பெண் வேடத்தில் விஜய் சேதுபதி

by B.Karthikeyan

‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா. அதனை தொடர்ந்து, அவர் இயக்கும் படம் “சூப்பர் டீலக்ஸ்”. இதில் விஜய் சேதுபதி “ஷில்பா” என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

அக்கதாபாத்திரத்தின் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. விஜய் சேதுபதியின் “ஷில்பா” நியூ லுக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், இப்படத்தில் சமந்தா, ஃபகத் பாசில், மிஸ்கின் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு நிரவ்ஷா மற்றும் வினோத் ஒளிப்பதிவு செய்கின்றனர்.

cof

Leave a Comment