Share

படத்தின் அங்கம்தான் பாட்டு – வைரமுத்துவின் பேச்சு

by B.Karthikeyan

வழக்கமாக சினிமா விழாக்கள் என்றாலே பிரபலங்களின் வருகை இல்லாமால் இருக்காது. ஆனால்,  “நெடுநல்வாடை” படத்தின் இசை வெளியிட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் பொதுமக்கள் முன்னிலையில் அவர்களே பாடல்களை வெளியிட்டது அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்தப்படம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக, 50 நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாடல்களைக் கேட்ட பொதுமக்களையே மேடையேற்றி அவர்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வைத்தது புதுமையாக பேசப்படுகிறது.

படத்தையும், பாடல்களையும் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து,

    “தலைப்புப் பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது தமிழ் சினிமாவை. இந்த நிலையில் ஈராயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு தமிழ் இலக்கியத்தின் தலைப்பை, தனக்கு ஆபரணமாகச் சூடிக்கொண்டு வெளிவரப் போகிற படம்தான் “நெடுநல்வாடை”.

    “ஒரு படத்தில் பாட்டு என்பது, உடலில் தொங்குகிற ஆடையாக இல்லாமல் உடம்பில் ஒட்டியிருக்கும் தோல் மாதிரி இருக்க வேண்டும் என்று நம்புகிறவன் நான். நெல்லை மாவட்டத்து வட்டார வழக்கில்  முழுக்க முழுக்க தமிழ்ப்பாட்டு எழுதுங்கள் என்றும் இயக்குனர் செல்வகண்ணன் கேட்டபோது நான் மகிழ்ந்து போனேன்”. 

IMG_20160729_100924

      “கிராமத்து வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்ட இந்தக் கதையில், இன்னும் அறுந்து போகாத தமிழ்க் கலாச்சாரத்தின் பழைய வேர்களைத் துப்பறிந்திருக்கிறார் இயக்குனர் செல்வகண்ணன்”.

     “ஒரு கிழவன் செய்கிற தியாகம்தான் “நெடுநல்வாடை”யின் மொத்தக்கரு. தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை. செல்வகண்ணன் பேர் சொல்லும்”. 

என்று கூறியுள்ளார்.

Nedunalvaadai - Audio Launch (68) copy

    மையப்பாத்திரத்தில், 70 வயது விவசாயியாக ‘பூ ராமு’ நடிக்கிறார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்துகோவிலான், செந்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, மு.காசிவிஸ்வநாதன் எடிட்டிங்கைக் கவனிக்க, ஜோஸ் பிராஃங்க்ளின் இசையமைக்கிறார். 

Leave a Comment