Share

பெப்சி வேலை நிறுத்தம் வாபஸ்

by B.Karthikeyan

‘பில்லா பாண்டி’ படத்தில் சம்பளம் சரியாக தரப்படவில்லை என்று டெக்னீஷியன் யூனியன் வேலை நிறுத்தம் செய்தது . இதனால் தயாரிப்பாளர் சங்கம் கோபம் கொண்டு பெப்சி தொழிலாளர்களுடன் இனி வேலை செய்ய மாட்டோம் என்று அறிவித்தனர்.

இதன் எதிர்வினையாக பெப்சி, வேலை நிறுத்தம் போராட்டத்தில் களம் இறங்கியது. சுமார் 40 படங்களுக்கு மேல் இதனால் பாதிக்கப்பட்டது.
நேற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி தொழிலாளர்களுக்கும் நடந்த இறுதி கட்ட பேச்சுவார்த்தையில், பெப்சி யின் 12 நாள் வேலை நிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டது.

இதனை குறித்து பெப்சி ஊழியர் ஒருவர்,

  “இருதரப்புக்கும் நல்ல புரிதல் வந்துவிட்டது. இனி எந்த காரணம் கொண்டும் வேலை நிறுத்தம் செய்ய முடியாத அளவிற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் விதிமுறைகளை ஒரு புத்தகமாக அச்சிடப்பட்டு அது பெப்சி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் வழங்கப்போவதாக முடிவாகியுள்ளது”.

என்று கூறியுள்ளார்.