Share

மீண்டும் அனு ஹாசன்

by B.Karthikeyan

         சுஹாசினி இயக்கத்தில் ‘இந்திரா’ படத்தில் அறிமுகமானவர் அனு ஹாசன். வெள்ளித்திரையில் நடித்து வந்தவர் பின் சின்ன திரையில் சில சீரியல்கள் நடித்தும் டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்தும் வந்தார். அதன் பின் திருமணமாகி லண்டனில் குடியேறினார்.

                நீண்ட நாட்களுக்கு பிறகு , “வல்லதேசம்” என்ற படத்தில் நடித்துள்ளார் அனு ஹாசன். இதில் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளதாகவும் பல சண்டை காட்சிகளில் துணிச்சலாக நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இனி படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியுள்ளார் அனு ஹாசன். 

       இப்படத்தினை என் டி நந்தா  இயக்கி மற்றும் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். வல்லதேசம் படம் வரும் 15 ம் தேதி வெளியாகிறது.  

Leave a Comment