Share

சீன மொழியில் த்ரிஷியம்

by B.Karthikeyan

இந்திய திரைப்படங்கள்  ‘3 இடியட்ஸ்’, ‘டங்கல்’ மற்றும் ‘பாகுபலி’ போன்றவை  சீன மொழியில் டப் செய்யப்பட்டு அந்நாட்டில் பிரமாண்டமாக ரிலீஸாகி நல்ல வசூலை பெற்றுள்ளன.

ஆனால் முதல் முறையாக சீனா மொழியில் ஒரு  இந்திய படத்தை ரீமேக் செய்ய போகின்றனர். மோகன்லால்  நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய மலையாள திரைப்படம் “த்ரிஷியம்”. சுமார் 75 கோடி வரை வசூல் செய்து மலையாள சினிமாவில் சாதனைப் படைத்தது. இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது இப்படத்தின் ரீமேக் உரிமையை சீன நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கியுள்ளது. இப்படத்தை ‘பாபநாசம்’ என்று தமிழில் கமல்  ரீமேக் செய்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment