a K Vijay Anandh review
அக்னி தேவி
சுவாதி கொலை, ராம்குமார் தற்கொலை, கண்டெய்னரில் பிடிபட்ட கோடிக்கணக்கான பணம் இந்த மூன்றையும் இணைத்து மிகவும் தைரியமான ஒரு திரைக்கதை அமைத்து படமாக்கியிருக்கிறார்கள் இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா.
ஒரு கலவரத்தில் நிர்க்கதியாக்கப்படும் மதுபாலா, பொதுப்பணித்துறை அமைச்சர் வீட்டு வேலைக்காரியாகி பின் அவர் சார்ந்த கட்சிக்கே தலைமை தாங்குவது என்பது வேற லெவல்.
பொதுப்பணித்துறை அமைச்சரின் பாலியல் பலவீனம், வேலைக்காரி மதுபாலாவை ஒரு மாநிலத்திற்கே சாபக்கேடாக்கி விடுகிறது.
ஒரு மாற்றுத்திறனாளி போன்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் மதுபாலா.
இன்னொரு பக்கம், தன்னைப் பேட்டியெடுக்க வரும் ஊடகவியலாளரின் கொலையைத் துப்புத்துலக்கி, அதன் ஆரம்பப்புள்ளியைக் கண்டுபிடித்துவிடும் காவல்துறை அதிகாரியாக பாபி சிம்ஹா. அட நல்ல கதை தானே, ஏன் சில சர்ச்சைகள்..? பாபி சிம்ஹாவின் அந்த, கரகர குரல் மிஸ் ஆவதால், கதாபாத்திரத்தின் கம்பீரமும் மிஸ் ஆகிவிடுகிறது.
அக்னி தேவி, துணிச்சலான படம்.