a K.Vijay Anandh review
டிவிட்டர் நாம போட்டா டிரெண்டிங் ஆவுறது அவய்ங்களா.. என்கிற கோபத்தில் போலீஸ் அதிகாரி ஆகி சாதிக்கத்துடிக்கும் யோகிபாபு, அது முடியாமல் போன நிலையில், தன் குலத்தொழிலான கூர்கா வாகவே சாதிப்பது தான் கூர்கா படத்தின் ஒருவரிக்கதை.
அதெப்படி, யோகி பாபு கூர்காவானார்..? அதுக்கு ஒரு அழகான பிளாஷ்பேக்.
யோகி பாபுவைப் பொருத்தவரை, தர்மபிரபு வை விட இதில் தாராள பிரபுவாகி நகைச்சுவை யுடன் சேர்ந்து செண்டிமெண்ட் மற்றும் நடிப்பிலும் ஜொலிக்கிறார்.
Mall இல் தீவிரவாதிகள் புகுந்த நிலையில் சார்லியுடன் இணைந்து தீவிரவாதிகள் சதியை முறியடிப்பது அட்டகாசம்..கொஞ்சம் அறிவுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
போலீஸ் வேலைக்கு லாயக்கு இல்லாத யோகிபாபுவுடன் போலீஸ் நாயாக ஆக லாயக்கில்லாத நாயும் சேர்ந்து கொண்டு செய்யும் குறும்புகள் குதூகலம்.
சைனீஸ் தூக்கம் போடுவதிலிருந்து, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சிறுவனை, தலைகீழாகத் தொங்கிக் கொண்டே யோகிபாபு காப்பாற்றும் காட்சி அருமை. இந்தக் குறிப்பிட்ட காட்சி, இன்றைய தேதியில் சர்வதேச ஆக்ஷன் ஸ்டார்களுக்குக் கூட கிடைத்திராத வாய்ப்பு என்றால் அது மிகையாகாது.
தீவிரவாதியாக வரும் ராஜ்பரத், பொருளாதார நிலையில் உயர்ந்து இதுந்தாலும், இலவசம் என்றால் வாயைப் பிளக்கும் மக்களின் பலவீனத்தைச் சரியாகப் பயன்படுத்தி, ஒட்டுமொத்தமாக அவர்களைத் திரைப்படத்திற்கு வரவழைக்கும் காட்சி அருமை, அமெரிக்க தூதரக அதிகாரி மார்கிரெட் உட்பட. சிக்கிக் கொள்கிறார்கள்.
ஒரு தேசிய அரசியல் கட்சித் தலைவரைக் கிண்டல் செய்யும் காட்சி, இயக்குநர் க்குப் பயன்பட்டிருக்கிறது, பிணையக் கைதிகளாக மாட்டிக் கொள்ளும் தேவதர்சினி, மயில்சாமி ஆகியோரின் Performanceதான் அந்தக் காட்சிகளை நம்ப வைக்க உதவுகிறது.
Mall க்கு வெளியே ஆடுகளம் நரேன், ரவி மரியா, மனோபாலா மற்றும் ஆனந்த் ராஜ் கூட்டணி பட்டையைக் கிளப்புகிறது.
மனோபாலா தலைமையில், சக்திமான் செக்யூரிட்டி ஏஜென்சி - இப்படி ஒரு சிந்தனை உருவானவர் உலகின் ஆகச்சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்றால் அது மிகையல்ல.
பொதுவாக, முதல்வன் முதல் இந்த வார வெளியீடான கொரில்லா , கூர்கா வரை கிளைமாக்ஸில் பொதுமக்கள் கருத்துச் சொல்வது, உணர்ச்சிவசப்படுவது என்று காட்டியிருப்பார்கள். ஆனால், இதில் கூர்கா தனித்து மிளிர்கிறது. அதற்குக் காரணம், பொதுமக்களும் பிரச்சினையில் பங்கெடுப்பதாகக் காட்டுவதே. ஆமால், தீவிரவாதியின் demand க்கு ஏற்ப பொதுமக்கள் பணம் அனுப்புவதும் அது Mall இன் வெளியே பெரிய திரையில் தெரிவதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் புதிது.
டிஜிட்டல் இந்தியாவைக் கிண்டல் செய்யும் படைப்பாளிகளுக்கு மத்தியில் டிஜிட்டல் இந்தியாவின் வசதியை அழகான காட்சியாக அமைத்த சாம் ஆண்டனின் உக்தி பாராட்டத்தக்கது.
ரவிமரியா - யோகிபாபு சம்பந்தப்பட்ட ஆரம்பக் காட்சிகளில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம் என்பதைத் தவிர மொத்தத்தில் ரூபனின் எடிட்டிங் அருமை.
இதை ஒரு பிரமாண்டமான படமாக்கியிருப்பது, கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு.
ராஜ் ஆர்யனின் இசையும் ஆட்டம் போட வைத்திருக்கிறது, யோகிபாபுவை. வெள்ளைக்காரியே... Weldone Yogi Babu ...
யோகிபாபு வின் வழக்கமான , அதாவது எதிரில் நடிப்பவர் யாராக இருந்தாலும் அசி ங்கசி ங்கமாகத் திட்டி நகைச்சுவை செய்வது இதில் பெரிய அளவில் குறைந்திருக்கிறது தான் என்றாலும், முற்றிலுமாகவே தவிர்க்கப்பட்டு, ஒரு நாகரீகமான நகைச்சுவையாக்கி இருக்கலாம் என்கிற அளவுக்குச் சிறப்பான கதைக்களம்.
யோகி பாபுவைப் பொறுத்தவரை தர்மப்பிரபு வை விட கூர்கா பல மடங்கு சிறப்பான படம்.
சாம் ஆண்டனைப் பொறுத்தவரை 100 ஐ விட 100 மடங்கு முழுமையான படம்.
இந்தவாரம் படங்களை வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர்கள் 4 Monkeys Studio மற்றும் வி நியோகம் செய்திருக்கும் லிப்ரா புரொடக்சன்ஸ் க்கு வணிக ரீதியில் வெற்றியைக் கொடுக்கும் படமாக கூர்கா.