a K.Vijay Anandh review
தந்தையின் கொள்கையை அவர் மரணத்திற்குப் பிறகும் தாங்கிப் பிடிக்கும் மகன், காதலனின் மரணத்திற்குப் பின்னும் அவன் நினைவில் வாழும் காதலி என்று அருமையான கதைக்களம்.
திரைக்கதை, வசனங்கள், பட ஆக்கம் ஆகியவற்றில் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், ஜனரஞ்சகமான ஒரு வெற்றி மிக அருகில் இருந்திருக்கும்.
நாயகன் வசி, தன்னுடைய உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்புகளில் கவனிக்க வைத்திருக்கிறார். அனுபவ நடிகர்களுக்குக் கூட வாய்க்காத சில வசீகரம் இவருக்கு வசப்பட்டிருக்கிறது.
பூஜா ஸ்ரீ, நாயகன் வசி அளவுக்கு இவரும் ஒரு நேர்த்தியான அழகில் வசீகரித்திருக்கிறார். இவர் காட்டும் அளவான கவர்ச்சியும் காதலும் கவனிக்க வைத்திருக்கின்றன.
நாயகனின் அப்பாவாக - வாத்தியாராக வரும் சீமான், வழக்கம் போல என்றாலும் மிகவும் அத்தியாவசியமான விவசாயம் மற்றும் நீராதாரத்திற்குக் குரல் கொடுத்து, போஸ் வெங்கட் சூழ்ச்சியில் உயிரை விடுகிறார்.
சிங்கம் புலி & கூட்டாளிகள் செய்யும் நகைச்சுவை ஓரளவுக்கு(த்தான்) ரசிக்க முடிகிறது.
முதல் பாராவில் குறிப்பிட்டதுபோல மிகச்சிறந்த ஒருவரிக்கதை, தவம்.
இன்னும்.கொஞ்சம் தவம் இருந்து விஜய் ஆனந்தும் - சூரியனும் செதுக்கியிருந்தால், மிகப்பெரிய வெற்றிப்படம் என்கிற அந்தஸ்தை ரசிகர்கள் கொடுக்கக்கூடும்.