a K.Vijay Anandh review
சில்லுக்கருப்பட்டி, பெயரைக்கேட்டாலே இனிக்கும், அதுமட்டுமில்லாமல் மருத்துவ குணங்களும் நிறைந்த ஒன்று.
கிட்டத்தட்ட இந்த சில்லுக்கருப்பட்டி படமும் அப்படித்தான். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, அப்படி ஒரு மன நிறைவுடன் வெளியே வருவீர்கள்.
ஒரு குப்பை மேடு, ஒரு ஓலா மகிழுந்து, ஒரு கடற்கரை, ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இந்த நான்கும் கதைக்களங்கள், நான்கு விதமான கதைகள்.
குப்பைமேட்டில் பிளாஸ்டிக் போன்ற பொருட்களைச் சேகரித்\து பாக்கெட் மணி பார்க்கும் மாஞ்ஜா ராகுலுக்கு இருக்கும் நேர்மையில், ஒரு சதவிகிதம் நாம் ஒவ்வொருவருக்கும் இருந்துவிட்டாலே சமுதாயம் செழித்தோங்கும். தெய்வத்திருமகள் சாரா, ஒரு பணக்கார வீட்டு, வாலிப வயதைத் தொட்டுவிடும் நிலையில் உள்ள பருவத்தில் வந்து அசத்துகிறார்.
ஓலாவில் வரும் மணிகண்டன், காலாவில் நம் இதயங்களைக் கவர்ந்தவர். ரஜினிக்கு அடுத்து அந்தப்படத்தில் மிளிர்ந்தவர். இந்தப்படத்திலும் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் மென்பொறியாளராக, வெப்சைட்டில் கிடைத்த பெண்ணை மிஸ் செய்துவிட்டு ஓலா ரைடில் கிடைத்த பெண்ணைக் கரம் பற்றுகிறார். இவருக்கும் நிவேதித்தாவுக்குமான காக்க கடி காதல் அழகு. நிவேதிதாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
டர்டிள் வாக், ஆமை நடை அல்லது ஆமைக்குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்கான நடை. தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் முற்றிலும் புதிய களம். நான்கு கதைகளில் மற்ற மூன்றும் சுவராஸ்யம் தருகிறது என்றாலும், எல்லாவிதத்திலும் சிறந்த பகுதியாக இந்தக்கதை இருக்கும். மூத்த குடிகள் க்ராவ்மகா ஸ்ரீராம் – யசோதா ஆகியோருக்கிடையிலான கண்ணியமான காதல் அழகு.
குடும்பத்தைக் காப்பாற்ற ஓடிக்கொண்டே இருப்பது மட்டுமல்ல வாழ்க்கை, உன் குடும்பத்தலைவியையும் கொஞ்சம் கவனிக்கவேண்டும் என்று சொல்லும் நான்காவது களம், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறைக்கு மிகவும் அத்தியவாசியமான ஒன்று. வழக்கம் போல சமுத்திரக்கனி பட்டையைக் கிளப்புகிறார் என்றால், வழக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சுனைனா உள்ளம் கவர்கிறார். அவர்களது குழந்தைகள் அடிக்கும் லூட்டிகளும் கூடவே குடும்ப உறுப்பினராக ஆகிவிடும் அம்மு – கூகுளும் – மொத்தமாக 2 மணி நேரப்படத்திற்கான விறுவிறுப்பான அதே நேரம் கலகலப்பான கிளைமாக்ஸுக்கு உத்திராவதம் கொடுத்துவிடுகிறார்கள்.
சர்வதேசத்தரத்துடன் இந்த சில்லுக்கருப்பட்டியை வார்த்திருக்கிறார் இயக்குநர் ஹலீதா ஹமீம்.
நல்ல படைப்பை புரிந்து உணர்ந்து தயாரித்த டிவைன் புரொடக்ஷன்ஸ் வெங்கடேஷ் வெளினேனிக்கு பாராட்டுகள்.
திரைப்பட விநியோகத்தில் ஏற்கனவே தனிமுத்திரை பதித்திருக்கும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேல், இந்தப்படத்திலிருந்து Signature Release என்கிற அற்புதமான முறையை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
முதல் சிக்னேச்சர் வெளியிடாக சில்லுக்கருப்பட்டி அந்தப்பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறது. அதற்கு முழுத்தகுதியும் அந்தப்படத்திற்கு இருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை.
குடும்பத்துடன் ரசித்து மகிழத் தவறாதீர்கள்!

நான்கு கதைகளுக்கும் அற்புதமான இசையால் பிரதீப் குமார் தனிஆவர்த்தனம் செய்கிறார் என்றால் அபி நந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் யாமினி யக்ன மூர்த்தி என்று கதைக்களத்திற்கு ஏற்ப காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக, பிங்க் பேக்கில் அந்தக்குடிசையை ஒட்டியிருக்கும் அரசமரம், அதில் சாய்ந்து அமர்ந்திருக்கும் மாஞ்ஜா - அந்தக்காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் குறிப்பிட்டுச் சொல்லும் படி ஒளிப்பதிவு செய்திருக்கிறது இந்த நால்வர் அணி.
சர்வதேசத்தரத்துடன் இந்த சில்லுக்கருப்பட்டியை வார்த்திருக்கிறார் இயக்குநர் ஹலீதா ஷ்மீம். எடிட்டிங்கையும் இவரே கையாண்டிருப்பது கூடுதல் வலுசேர்த்திருக்கிறது. வசனங்களில் யதார்த்தமும், அறிவுப்பூர்வமும் குவிந்து கிடை(ட)க்கின்றன.