a K.Vijay Anandh review
காதலும், துரத்தலும் அத்துடன் நகைச்சுவையும் கொஞ்சம் தூக்கலாகக் கலந்து சக்க போடு போட்டிருக்கிறார், சன்த்அஅனம்
அக்காவை, அவர் விரும்பும் தன் நண்பனுக்குக் காதல் திருமணம் செய்துவைத்துவிட்டு, அவரது தங்கை வைபவி சந்தியாவுக்கு ரூட்டுப் போட பிரச்சினைகள் கிளம்புகிறது.
அதனைத் தனக்கே உரிய பாணியில் சொல்லி கலகலப்பூட்டியிருக்கிறார்.
கூடவே புதுப்புது அர்த்தங்களை இன்னும் தந்துகொண்டு சந்தானத்துடன் போட்டி போட்டு காமெடி செய்து அப்டேட் ஆகியிருக்கிறார் விவேக். நாளைக்குச் சந்தானத்தின் மகன் , நடிக்க வந்தாலும், அவருக்கும் ஈடுகொடுப்பார் மனிதர்.
ரோபோ சங்கர், விடிவி கணேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் கலகலப்புக்குப் பஞ்சம் இல்லாமல், சிரிக்க வைத்து வயிற்றைப் பஞ்சராக்குகின்றன.
சந்தானம், வித்தியாசமான ஹேர் ஸ்டைல், ஸ்டைலான உடைகள், ரொமாண்டிக் ஹீரோவுக்கான உடல்மொழி என்று அடுத்த கட்டத்திற்குச் சென்றிருக்கிறார்.
எஸ் டி ஆர், ஒரு ஜனரஞ்சக மசாலாப் படத்திற்கு வேற லெவலில் இசைமைத்திருக்கிறார். அவரது இசையில் சந்தானம் ஆடும் போது, எஸ் டி ஆர் ஆடுவது போலவே இருக்கிறது.
வைபவி சந்தியா, அழகும் திறமையும் ஒருங்கே பெற்ற புதுவரவு, கொள்ளைகொள்கிறார்.
எஸ் டி ஆரின் பாடல்கள், சண்டைக்காட்சிகள் ஆக்ரமித்தது போக , ஒரு மணி நேரத்திற்கும் குறைவான காட்சிகளைக் கச்சிதமாக எழுதி ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து அளித்திருக்கிறார் இயக்குநர் ஜி.எல்.சேதுராமன்.
ஆனால், இதெல்லாம் நீங்க லொள்ளு சபாவிலேயே செஞ்சிட்டீங்க, படம் என்று வரும் போது, இன்னும் எதிர்பார்கின்றோம், சந்தானம் என்கிற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.