a K.Vijay Anadh review
கிட்டத்தட்ட நான்கு ரீல்களுக்கு ஒரு முக்கியமான திருப்பம். ரசிகர்கள் ஒன்றை நினைத்து வந்தால், முற்றிலும் மாறாக இன்னொன்று நடக்கிறது.
முதல் படத்திலேயே கவனிக்க வைத்துவிட்டார் இயக்குநர் SK வெற்றிச்செல்வன்.
ஒரு சமூகப்போராளி கதாபாத்திரத்தில் , டாஸ்மாக்கிற்கு எதிராக, பேனர் வைப்பதற்கு எதிராக என்று ஒரு முன்னுதாரண மங்கையாக அதுல்யா ரவி இதுவரை ஏற்றிராத கதாபாத்திரம். மிகச்சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக ஜெய் உடனான டூயட் பாடல்களில் மிகவும் அழகாக, ஒப்பிடக்கூடாது தான் எனினும் சில காட்சிகளில் பாலிவுட் ஹீரோயின்களை விட ஜொலிக்கிறார்.
ஜெய், அடுத்துடுத்து வெளியாகும் படங்கள், நடிப்பதிலும் ஆக்ஷன் காட்சிகளிலும் கொஞ்சம்.மெனக்கெட ஆரம்பித்திருக்கிறார் என்று காட்டுகிறது. அப்பா பிள்ளையாக தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவருக்கு கல்லூரி காதல் நினைவுக்கு வர அன்று செய்த தவறை சரிசெய்ய அதுல்யாரவியின் பின்னால் அவர் ஓடுவது அழகு, சில இடங்களில் நவரச நாயகனை நினைவுபடுத்துகிறார்.
2000 கோடி மதிப்பிலான வைரங்களை கடத்தப்போடும் ஆப்ரேஷனில் கொள்ளையர்களின் மனசாட்சியற்ற தன்மையால் அப்பாவிகள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது தானே!
அது தான் படத்தின் ஆரம்பம், அதிலிருந்து அப்பாவியான ஜெய் எண்ணித்துணிந்து எப்படி ஆக்ரோஷமான ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார், முடிச்சுகள் அவிழ்ந்ததா என்பதே விறுவிறுப்பான திரைக்கதை.
நமது நிஜமான அமைச்சர்களை அப்படியே பிரதிபலிக்கும் கதாபாத்திரம் சுனிலுக்கு. அவருடன் வித்யா பிரதீப், அவர்களிடம் சிக்கிக்கொள்ளும் அஞ்சலி நாயர், மிரட்டும் வில்லன் வம்சி, பொறுப்பான அப்பாவாக மாரிமுத்து என்று நாயகன் ஜெய், நாயகி அதுல்யா ரவி ஆகியோர் படத்தில் வைரங்களாக ஜொலித்திருக்கிறார்கள்.
சாம் சி எஸ்ஸின் இசையில் பாடல்கள் அருமை.
இந்தப்படத்திற்கு துணிந்து டிக்கெட் எடுக்கலாம்!