a K.Vijay Anandh review
குழந்தைகள் உரிமை என்பதை மையக்கருவாக வைத்து நடத்தப்பட்ட ISR – 5 நிமிடக்குறும்பட போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வான 11 படங்களில் ஒன்று, கண்ணாடி.
கண்ணாடி, ஆம்., கண்ணாடி புதிதாக எதையும் காட்டாது. அதில் விழும் பிம்பத்தை பிரதிபலிக்கும். அதுபோலத்தான் குழந்தைகளும், அவர்கள் முன்னிலையில் பெரியவர்கள் செய்யும் தவறான விஷயங்களை அவர்களும் செய்ய முயலுவார்கள்.
கண்ணாடியில், மாஸ்டர் சஞ்சய் பாலா, தனது தந்தையின் புகைப்பழக்கத்தை அப்படியே பின்பற்ற முயல்கிறார், சுதாரித்துக்கொண்ட கண்ணாடி, அவனது தந்தை அதை தடுத்ததோடு மட்டுமல்லாமல், தானும் திருந்துகிறார்.
ரகுவின் கேமரா கோணங்கள், அலிமிர்ஸாவின் இசை, வசனங்களே இல்லாமல் நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு என்று இரா.பிரபுவின் இயக்கத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.
கண்ணாடி, சிறந்தவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக பெரியவர்கள் இருக்கவேண்டும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறது.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You