a K.Vijay Anandh review
மான்வேட்டை, பெயருக்கு ஏற்றமாதிரியே படம் முழுவதும் வேட்டைதான். முதற்பாதியில், காதலர்கள் தங்களது காதலியை காட்டிற்கு அழைத்துச்சென்று வேட்டையாடி மகிழ்கிறார்கள். இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்தமாக அனைவரையும் பத்து நாட்களுக்கு முன்பு கற்பழித்து கொல்லப்பட்ட சுனிதா மற்றும் அவரது காதலரின் ஆவி வேட்டையாடுகிறது.
உண்மையில், பேய் நடமாட்டம் இருக்கிறதா என்று கேமராக்கள் சகிதம், தனது நண்பர்கள், அவரவர் பெண் தோழியர் சகிதம் காட்டிற்குள் பயணமாகும் மீடியாவில் பணியாற்றும் நாயகன், அங்கே நிஜமாகவே பேய்களுடன் மாட்டிக்கொள்வது என்று சுவராஸ்யமான கதைக்களம் தான்.
ஸ்ரீகாந்த் தேவா வேறு முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலுமாக இரண்டு நல்ல பாடல்கள் பயமுறுத்தும் பின்னணி இசை என்று அசத்தியிருக்கிறார். அடர்ந்த காடுகள், ரகசியான அருவிகள் என்று கேமராமேனும் சிறப்பாக தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
அவர்களுடன் , இயக்குநர் திருமலை, இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஒட்டுமொத்தமாக படமும் அருமையாக இருந்திருக்கும்!