நடிகர் தம்பி இராமையா தனது மகன் உமாபதிக்காக ஒரே படத்தில் பல அவதாரங்களை எடுத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என்கிற அவதாரங்களுடன் மணியார் குடும்பம் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், ஆர்.கே.சுரேஷ், அருமை சந்திரன், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், சேரன், ஏ.வெங்கடேஷ், பிரபு சாலமன், மோகன் ராஜா, கெளரவ், கரு.பழனியப்பன், சிவா ஆகியோர் கலந்து கொண்ட தம்பி இராமையாவின் குடும்ப விழாவாக மணியார் குடும்ப விழா நடைபெற்றது.
சொத்தை விற்று உட்கார்ந்து சாப்பிடும் அப்பா, ஊதாரித்தனமாக ஊரைச் சுற்றும் மகன், ஆறுமாதங்களில் குடும்பம் திவாலாகப் போய்விடும் என்கிற நிலையில் அவர்கள் குடும்பத்திற்குள் வரும் நாயகியால் என்ன எதிர்பாராத மாற்றம் ஏற்படுகிறது என்பது தான் மணியார் குடும்பத்தின் கதை.
உமாபதிக்கு ஜோடியாக மிருதுளா மற்றும் பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார்கள்.
VU Cinemas தேன்மொழி மற்றும் சுங்கரா தயாரித்திருக்கும் மணியார் குடும்பம் படத்தை சக்திவேல் பிலிம் பேக்டரி சக்திவேல் ஜூலை மாதம் வெளியிடுகிறார்.