சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த இந்தியாவின் முதல் ஸ்பேஸ் பிலிம் என்கிற பெருமையைப் பெற்ற படம் டிக்:டிக்:டிக்
இந்திய இராணுவம் ஸ்பேஸில்.நடத்தும் ஒரு அதிரடி ஆக்ஷன் தான் திரைக்கதை என்றாலும் அதனூடாக ஜெயம் ரவி மற்றும் அவரது மகனுக்கிடையிலான தந்தை மகன் பாசப்பிணைப்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த்து என்றால் அது மிகையல்ல.
ஜெயம் ரவியின் மகனாக , அவரது சொந்த மகனான ஆரவ் ரவியே நடித்திருந்தது இயக்குநரின் கற்பனைகளுக்கு உயிர்கொடுப்பதாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்தவாரம் வெளியான டிக்:டிக்:டிக் படம் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அதன் வெற்றி விழா இன்று கொண்டாடப்பட்டது.
இந்தப்பிறந்தநாள் ஆரவ் ரவிக்கு மறக்க முடியாய நாளாக இருக்கும் என்றால் மிகையல்ல. ஆம்., இன்றைய அவரது பிறந்தநாளில், தான் அறிமுகமான படத்தின் வெற்றி மட்டுமல்ல தனது தந்தையின் படத்தின் வெற்றியும் அவருக்குப் பரிசாகக் கிடைத்திருக்கிறதே!
இன்று நடைபெற்ற இந்த வெற்றிச் சந்திப்பில் ஜெயர் ரவி, மோகன் ராஜா, சக்தி செளந்தர் ராஜன், மதன் கார்க்கி, டி.இமான், டிக்:டிக்:டிக் படத்தின் சண்டைக்காட்சிகளுடன் ஸ்பேஸில் நடைபெறும் Zero Gravity காட்சிகளையும் நேர்த்தியாக அமைத்த சண்டைப் பயிற்சியாளர் மிராக்கிள் மைக்கேல், கிராபிக்ஸ் காட்சிகளை அமைத்த அருண் ஆகியோருடன் எடிட்டர் மோகனும் கலந்து கொண்டனர்.
டிக்:டிக்:டிக் படம் டி.இமானின் 100 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவி நடிகராக அறிமுகமான முதல் படம் வெளியானது ஜூன் 21, அவரது மகன் ஆரவ் ரவி நடிகராக அறிமுகமாகும் படம் ஜூன் 22 இல் வெளியாகியிருக்கிறது என்கிற சுவராஸ்யமான விஷயத்தைச் சொல்லி குழுவினரைப் பாராட்டினார், மோகன் ராஜா.