ரோட்டரி 3232 ஐச் சேர்ந்த ரோட்டேரியன்களின் மனைவிகள் சேர்ந்த அமைப்பு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழஙகும் விழா இன்று நடைபெற்றது.
By the woman, For the woman, Of the woman என்கிற முழக்கத்துடன் நடைபெற்ற Honey Queen Fiesta வில் மற்றொரு சிறப்பம்சமாக Pink Auto என்கிற சேவையும் துவக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் முதன் முறையாகப் பெண்களுக்கு சுய தொழில் புரிய ஏதுவாகத் தொடங்கப்பட்ட இந்த சேவையை விக்ரம் பிரபு கொடி அசைத்து துவங்கி வைத்தார். காவல்துறை இணை ஆணையர் சி.மகேஸ்வரி, இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் சுப்பு பஞ்சு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதன் முதன்பயனாளிகளாக, காவல்துறையினரின் மனைவிகள் இருப்பார்கள். தொடர்ந்து, சுயதொழிலில் ஆர்வமுள்ள அனைத்து தரப்பு பெண்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படும்.
ஓட்டுநரின் முழுவிபரமும் ஆட்டோவில் வைக்கப்பட்டிருக்கும். இலவச WiFi, FM ஆகிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் இந்த Pink Auto சேவையை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல். விரைவில், மெட்ரோ & இரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் Pink Auto க்களைக் காணலாம்.
ஜிபிஎஸ் மற்றும் மீட்டர் பொருத்தப்பட்டு, தனியாகப் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பைப் பிரத்யேகமாகக் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Pink Auto சேவை, திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதனின் மனைவி நல்லம்மை ராமநாதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.