மா கா பா, சுஷா குமார், வத்ஸன், அனு , மதுமிதா மற்றும் யோகி பாபு நடித்திருக்கும் மாணிக், நாளை ஜனவரி 4 இல் வெளியாகிறது. இளைஞர்களைக் கவரும் விதத்தில் ஒரு Dark Humor வகைப்படமாக இதனை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மார்டின்.
மொஹிதா சினி டாக்கீஸ் M.சுப்ரமணியன் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார். "மாணிக்" திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் மார்ட்டின் பேசியது, “ நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு மிகப் பெரிய ஆசை ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது. ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான தகுதி இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள்.
சரியான ஊடக அனுபவம் வேண்டும் என்பதற்காக குறும்படம் ஒன்றை எடுத்தேன். அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். அங்கே, நான் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றேன். இறுதிச் சுற்று வரை சென்றேன். இயக்குநர் சுந்தர் C
என்னை இதே பாணியில் பணியாற்ற சொன்னார். நானும் லாஜிக் இல்லாமல் கதை செய்யும் பாணியில் இப்போது வரை பயணித்து 'மாணிக்' படத்தை இயக்கியுள்ளேன். 'மாணிக்' என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என்றே கூறலாம். இப்படத்தின்
கதாபாத்திரங்கள் மிகவும் புதுமையாக இருக்கும்.. தரன், அற்புதமாக இசையமைத்துள்ளார். நாயகன் மாகாபா ஆனந்த் தனது மனைவியிடம் அவர் நடித்ததிலேயே சிறந்தபடம் மாணிக் என்று கூறியிருக்கிறார். மா கா பா , ஒரே டேக்கில் நடித்து முடிக்க கூடியவர். மனோபாலா, அருள்தாஸ், யோகிபாபு என்று முன்னணி நடிகர்கள் அறிமுக இயக்கு நராக இருந்தாலும் பெரிய இயக்கு நர்களுக்குக் கொடுக்கும் அதே ஒத்துழைப்பை எனக்கு அளித்துச் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். ..
'மாணிக்' படத்தின் மையக்கதை என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே…படம் இளைஞர்களை நிச்சயம் கவரும்…” என்றார்.