இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் உதய நிதி , தமன்னா நடிக்கும் படம் கண்னே கலைமானே. இந்தப்படத்தில் பாட்டி வேடத்தில் நடித்திருக்கிறார் வடிவுக்கரசி.
கண்ணே கலைமானே அனுபவங்களைப் பற்றிக்கூறிய அவர், “சீனு ராமசாமி இயக்கத்தில் நீர்ப்பறவையில் சிறிய வேடத்தில் நடித்தேன். அப்பொழுதே சொன்னார், இரண்டு கதைகள் இருக்கின்றன, அவற்றில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று. நாம் நன்றாக நடிக்க வேண்டும் என்பதற்காக சும்மாவாவது சொல்லுவார்கள், என்னுடைய எல்லாப்படங்களிலும் நீங்கள் இருப்பீர்கள் என்று. அப்புறம் ஆளையே பார்க்க முடியாது, ஆனால், சொன்னது போலவே இடம் பொருள் ஏவல் மற்றும் கண்ணே கலைமானே படங்களில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
இத்தனை வருடம் நடிக்கிறேன், ஆனால் இது தான் எனது முதல்மேடை என்று அம்பானிசங்கர் படபடத்த மன நிலையில் தான் நானும் இருக்கிறேன். இப்பொழுது வரும் இயக்குநர் களுக்கு இப்படி.எங்களை மாதிரி சீனியர் நடிகர்கள் இருப்பதே தெரியாமல் கூட இருக்கலாம். எங்களை அழைத்து வாய்ப்பு கொடுப்பதில் மகிழ்ச்சி, மூத்த நடிகர்கள் சார்பாக இந்தப்படக்குழுவினருக்கு நன்றி.
Born with Silverspoon உதயநிதி எளிமையாக இருப்பது தான் அதிசயம். படப்பிடிப்பில், மண்புழுக்களையெல்லாம்.அசால்ட்டாக அள்ளினார். இயக்குநர் என்னவெல்லாம் சொல்கிறாரோ அதையெல்லாம் அப்படியே செய்கிறார். உதயநிதி உடன் ஒரு படமாவது நடித்துவிடவேண்டும் என்று ஆசையிருந்தது. சீனு ராமசாமி நிறைவேற்றிவிட்டார்.
உதயநிதி- தமன்னா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளைப் பார்க்கும் போது, இப்படிப்பட்ட காட்சிகளெல்லாம் நான் சிறுவயதில் நடிக்கும் போது யாரும் சொல்லவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.அவ்வளவு அழகாக இருந்தது.
உதயும் தமன்னாவும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள், குறிப்பாக காதல் காட்சிகள் அருமை. கவர்ச்சியாகப் பார்த்துப் பழக்கப்பட்ட தமன்னாவா , என்று வியந்தேன்.
கதையோடு சேர்ந்த காட்சிகளாகவே பாடல் காட்சிகளும் இருக்கும். பாடல்கள் பதிவு செய்யப்படாமலே எங்களை மிகவும் இயல்பாக நடிக்கச் சொல்லி, நாங்கள் நடித்ததையெல்லாம் பாடல்காட்சிகளாகக் கோர்த்திருக்கிறார்கள்.
உறவுகளுக்குள் நடக்கும் பிரச்சினை தான் கதை, சீனு ராமசாமி அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்..” என்றார்.
.