திரைப்படங்களின் வெற்றிக்கு நினைப்பதக்கங்கள் கொடுப்பது என்கிற கோலாகலக் கொண்டாட்ட வரலாற்றைத் திரும்பவும் நிகழக்காரணமாக இருந்தவர் சீனுராமசாமி. தர்மதுரை படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அதன் நடிகர்கள் தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு Shield எனப்படும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
அதனையடுது, இரண்டரை வருடங்களுக்குப் பிறகு உதய நிதி- தமன்னா நடிக்க கண்ணே கலைமானே வுடன் வந்திருக்கிறார். ஏன் இந்தத்தாமதம், இந்த வாய்ப்பு உருவானது எப்படி என்று பகிர்ந்துகொண்ட சீனுராமசாமி, “தர்மதுரை வெற்றிக்குப் பிறகும், என்னை சப்பாணியாகத்தான் பார்த்தார்கள். விஜயசேதுபதிதான் மறுபடியும் என்னை அழைத்து மாமனிதன் பண்ணுவோம் என்றார், படத்தினை முடித்துவிட்டோம், விரைவில் வெளியாகும். கண்ணே கலைமானே வைப் பொறுத்தவரை ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி இந்த வாய்ப்பை உருவாக்கினார்கள்.
ஒரு குத்துப் பாட்டு வைத்துவிடுங்கள் என்று ஒரு நிபந்தனை வைத்தார் செண்பகமூர்த்தி. அதுமட்டுமல்லாமல், படப்பிடிப்பு முடியும் வரை அவரும் கூடவே இருந்தார். யுவன் சங்கர் ராஜா, குத்துப்பாட்டிற்கான டியூனை இன்னும் போடவில்லை என்று சமாளித்தேன். ஒரு கட்டத்தில் கொஞ்சம்கோபமாகவே - பேரறிஞர் அண்ணா பேசும் போது சில்க் ஸ்மிதாவை ஆடவைக்க.முடியுமா என்று கேட்டுவிட்டேன். அதன்பின் உதய நிதி மூலமாகச் சொல்லி, அதனைச் சமாளித்தேன். என் நிதியை உயர்த்திய உதயநிதி, இந்தப்படம் மூலம்.உதயநீதியாகவும் ஆகிவிட்டார். படைப்புக்கு மிகவும் நேர்மையாக இருந்தார்.
பெண்களை.முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து எழுதப்பட்ட காதையில் உதயநிதி நடிக்க ஒத்துக்.கொண்டதே பெரிய விஷயம். இதைப் போன்ற 10 படங்களில் நடித்தாரென்றால் தமிழ்சினிமாவில்.மிகச்சிறந்த இடத்தில் அவர் இருப்பார். அவர் ஒரு கருத்துச் சுதந்திரவாதி, கிடைக்கும் நேரங்களில் எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை குறித்து அவரிடம் பேசிக்கொண்டிருப்பேன். எம் ஜி ஆர் இறந்தபோது அவர்கள் வீட்டில் இருந்தவர்களும் அழுதார்கள்.என்றார், அந்தளவுக்கு மிகவும் இயல்பாகப் பழகக்கூடியவர். தமன்னா கதாபாத்திரத்திற்கான நடை உடை பாவனைகளை.முன்னாள்.முதல்வர் ஜெயலலிதா போன்று அமைத்திருந்தேன், அதைப்பற்றி எந்தவிதமான ஆட்சேபணைகளையும் உதயநிதி தெரிவிக்கவில்லை. தமன்னா , நல்ல ஆன்மா. சரஸ்வதி சம்மணம்.போட்டு அவரிடம்.உட்கார்ந்திருக்கிறார். கலையரசி அவர்.
எவ்வளவு செலவு செய்யவேண்டுமானாலும் தயாராக இருந்த நிலையில், கதைக்கு என்ன தேவையோ அதைமட்டும் செய்து படத்தை எடுத்தேன். சேலையில் கவுன் தைக்கும் இடத்தில்.கர்சீப்பில் கவுன் தைத்து படம் எடுக்கும் ஆள், நான்.
என் படம் ஏமாற்றாது, தரமில்லாத படத்தை என்னால் எடுக்க இயலாது.
மக்கள் செல்வன் விஜயசேதுபதிதான் என்னுடன் இருக்கிறார் என்று நினைத்தேன் மக்கள் நாயகன் உதயநிதி யும் இப்பொழுது என்னுடன் இருக்கிறார்.
இந்தப்படத்திற்கான முதல் பாராட்டு யுவனிடம் இருந்து கிடைத்தது.
காட்சிகளை எடுத்தபிறகு தான் பாடல்வரிகள் எழுதப்பட்டு இசை அமைக்கப்பட்டது
தென்மேற்கு பருவக்காற்று படப்பிடிப்புக்கு.விமானத்தில் வந்த ஒரே ஆள் வசுந்த்ரா தான், இந்தப்படத்தில்.மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்...” என்றார்.