எழுமின் படம் மூலம் அறிமுகமான இளம் இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன், தனது முதல் படத்த்யிலேயே தனுஷ், அனிருத் மற்றும் யோகி பி போன்ற பிரபலங்களைப் பாட வைத்து அசத்தியது நினைவிருக்கலாம். தற்பொழுது, சூப்பர்சிங்கர் பிரபலமான சாய் விக்னேஷ், தனுஜ் மேனன் மற்றும் ராஜேஷ் கிரி பிரசாத் ஆகியோர் பாட பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் கோரஸுடன் சென்னை சூப்பர் கிங்ஸ்டா எனத் தொடங்கும் சிங்கிள் டிராக் Single Track பாடலை எழுதி இசையமைத்திருக்கிறார்.
இதுகுறித்து கேட்டபோது, “ இசையும் கிரிக்கெட்டும் என் வாழ்க்கையில் பெரிய அங்கமாக இருந்துவருகின்றன. ஆகவே, கிரிக்கெட் குறித்தான பாடலை எழுதி இசையமைக்கும் ஆர்வம் வந்தது.. பாடலைக் கேட்ட நடிகர் விவேக், அருண்ராஜா காமராஜா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் பாடலை வெகுவாகப் பாராட்டியதுடன் தங்களது டிவிட்டர் பக்கங்களில் பகிருந்துமிருக்கிறார்கள்..” என்றார் கணேஷ் சந்திரசேகரன்.
https://www.youtube.com/watch?v=NUNbs1GbgRw