திரைப்படத்தொழில் என்பது பல்லாயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கும் உன்னதமான தொழில். இந்தத் தொழில் செழித்து வளர, தயாரிப்பாளர்கள் மிகவும் முக்கியம். பணம் இருந்தால், ஒரு படத்தைத் தயாரித்துவிடலாம். ஆனால், திரைப்படத்துறை சார்ந்த அறிவும், ரசிகர்களுக்கு எதைக் கொடுக்கவேண்டும் என்கிற தெளிவும் இருந்தால் தான் வெற்றிகரமான தயாரிப்பாளராக அடுத்தடுத்துப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும்.
அந்த வகையில், விஷயம் தெரிந்த டாக்டர் ஐசரி கே கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர் நேஷனல், வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாகவும் ஜொலிப்பதில் வியப்பேதுமில்லையே!
அவர்களது முதல் தயாரிப்பான எல் கே ஜி யைப்பற்றி மக்கள் இன்னும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவது தயாரிப்பான, வருண் நடிப்பில் உருவான பப்பி 25 நாட்களைத் தொட்டிருக்கிறது. இரண்டாம் தயாரிப்பான கோமாளியோ, பைரசிகளைத் தாண்டி 80 வது நாளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி நடித்த கோமாளி, ஒருமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வருண் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளியான 'பப்பி', இளைஞர்கள் மட்டுமின்றி குடும்பமே கொண்டாடும் படமாக வெற்றி நடைபோடுகிறது. வெளியாகி 25 நாட்கள் கடந்தும் இன்னும் எந்தக் காட்சிகளும் ரத்தாகாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. வருணுக்கு ஒரு காக்க காக்க என்று சொல்லத்தக்க, இமைபோல் காக்க என்கிற இணைப்பு வார்த்தைகளுடன் வரும் 'ஜோஷ்வா' படத்தை, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தனுஷ் நடிப்பில் உருவான 'என்னை நோக்கிப் பாயும் தோட்டா' திரைப்படத்தை நவம்பர் 29 ஆம் தேதி வெளியிடுவதாக வேல்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
தந்தையின் திரைப் பாரம்பரியம் மற்றும் ஆசியுடன், சரியான திட்டமிடல் மற்றும் திரை வணிகத்தில் பின்பற்றும் நிதானத்துடன் கூடிய வெளிப்படைத்தன்மை ஆகியவையே வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனலின் வெற்றிப்பயணத்திற்கு காரணம் என்கிறார் ஐசரி கே கணேஷ்.