மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் உருவாகியுள்ள படம் “சைக்கோ. சென்சார் ஃபோர்ட் “சைக்கோ” படத்தலைப்புக்கு முழு அனுமதி வழங்கிய உற்சாகத்துடன், தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம், சைக்கோ படம் உலகெங்கும் 2020 ஜனவரி 24 அன்று வெளியாகவிருப்பதாக அறிவித்துள்ளார்.
தனது Double Meaning Production சார்பில் “சைக்கோ” படத்தை தயாரிக்கும் அருண்மொழி மாணிக்கம், “மிக குறுகிய சினிமா பயணத்தில் நான் சில படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்துள்ளேன். ஆனால் “சைக்கோ” திரைப்படம் எனக்கு கிடைத்த பரிசாகவே நினைக்கிறேன். படம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரையிலான நிகழ்வுகள் என் வாழ்வில் என்றென்றும் ஒரு அற்புதமாக நிலைத்து நிற்கும்.
இயக்குநர் மிஷ்கினின் திறமையான எழுத்து மற்றும் நேர்த்தியான இயக்கம், தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தைச் சம்பாதித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவருடன் திறமையான நடிகைகளான நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோரின் வித்தியாசமான அவதாரம் என இப்படத்தின் அனைத்து அம்சங்களும் பெரும் எதிர்ப்பார்பையும் நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது.
ஒரு பார்வையாளனாக “சைக்கோ” படம் மிஷ்கினின் முத்திரைகளுடனும் இசைஞானி இசையுடனும் என்னை சீட்டின் நுனியில் அமரவைத்தது. அதே அனுபவத்தை ரசிகர்களும் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும் விதமும் படத்தின் கதைக்களமும் மொழிகடந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெரும் ஆகையால், “சைக்கோ” படத்தினை இந்திய முழுதும் பன்மொழிகளில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்..” என்றார்.
Double Meaning Production நிறுவனத்தின் முதல் மிகப்பெரிய வெளியீடாக சைக்கோ இருக்கும் என்று மேலும் தெரிவித்தார் அருண்மொழி மாணிக்கம்.