தனது இயல்பான நடிப்பாலும் எந்த சூழ்நிலையிலும் அதே இயல்புடன் இருப்பதாலும் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய்சேதுபதியின் 41 வது பிறந்தநாளை முன்னிட்டு, மூத்த பத்திரிகையாளர் நெல்லை பாரதியின் Thiraippadam.in இணைய தளம் பல்வேறு போட்டிகளை அறிவித்திருக்கிறது.
விஜய்சேதுபதியை ஓவியமாகத் தீட்டுதல் ( நடுவர் ஓவியர் ஏ பி ஸ்ரீதர் ) விஜய்சேதுபதி போல, மிமிக்ரி செய்தல் ( வீடியோ அனுப்பவேண்டும், நடுவர் மயில்சாமி ), அவரது வசனங்களுக்கு அபிநயம் செய்தல் ( டிக்டாக் - நடுவர் கார்த்திக் சுப்புராஜ் ) , விஜய்சேதுபதியின் நடிப்பு பற்றிய விமர்சனம் (41 வார்த்தைகளில் - நடுவர் சீனுராமசாமி ) ஆகிய போட்டிகள் அனைவருக்குமானதாகவும் , பெண்களுக்கென்று பிரத்யேகமாக, விஜய்சேதுபதியை ஏன் பிடிக்கும் என்பதை எழுதி அனுப்புங்கள் ( நடுவர் ஜனநாதன் )
முதல் நான்கு போட்டிகளுக்கும் முதல்பரிசு 10 ஆயிரம், இரண்டாம் பரிசு 5 ஆயிரம், மூன்றாம் பரிசு 3 ஆயிரமும் ஐந்தாவது போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 41 பேர்களுக்கு தலா 1000 ₹ வழஙகப்படும்.
படைப்புகளை வரும் டிசம்பர் 30 க்குள் வாட்ஸப் வாயிலாகவோ மெயில் - மின்னஞ்சல் வாயிலாகவோ அனுப்பவேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி, இந்தச் செய்தியின் புகைப்படத்தில் உள்ளது.