வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் சீறு படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் ஜீவா. படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி கூறியபோது, “ பொதுவாக ஒரு மணி நேரத்திற்குள் தான் கதை சொல்லச் சொல்வேன். ஆனால், ரத்ன சிவா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்த போது இரண்டு மணி நேரங்கள் விறுவிறுப்பாகக் கதை சொன்னார். அதே விறுவிறுப்பை படத்தில் கொண்டு வந்திருக்கிறார். இயக்குநருக்கு பயங்கரமாக கதை சொல்லும் திறமை இருக்கிறது. அவர் யாரிடம் வேண்டுமானாலும் கதை சொல்லி ஓகே வாங்கி விடுவார். அவ்வளவு திறமையானவர்.
இந்தப்படத்தில் கேபிள் டீவி ஆப்ரேட்டராக, துள்ளலான இளைஞனாக நடித்திருக்கிறேன். திரைக்கதை அட்டகாசமாக இருக்கிறது. இந்தப்படம் ஒரு பக்காவான கமர்ஷியல் படம். எல்லாவிததத்திலும் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் படமாக இருக்கும். ஒரு பக்காவான தமிழ்ப்படமாக இருக்கும்.
83 பட புரமோஷனில் கச்சேரி, கச்சேரி பாடல் ரன்வீர் கேட்டு வாங்கி ஆடினார். இமான் இசையமைத்த பாடல்கள் பற்றி அவர் பெருமையாக பேசினார். இந்தப்படத்தில் வா வாசுகி எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப்படத்திற்கு இமான் பெரும் பலமாக இருக்கிறார். சாந்தினி காட்சிகள் அருமையாக இருந்தது. அவர் அற்புதமாக நடித்துள்ளார். அவருடன் வரும் அந்த 10 மாணவிகளும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்து மிகவும் வியந்தேன்.
83 மற்றும் எங்களது நிறுவனத்தில் ஒரு படம் என்று பணியாற்றிக் கொண்டிருந்தேன். யாருக்கும் பிரச்சினை வராமல் மிகவும் திட்டமிட்டு சீறுவை தயாரித்தார்கள். இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளுக்காக பிரத்யேகமாக ஒரு மாதம் ஒதுக்கினேன். சண்டை இயக்குநர் கணேஷ் குமாருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்வான தருணமாக இருந்தது.
இந்தப்படம் வேல்ஸ் ஃபிலிம்ஸ்ல் நடித்தது எனக்கு சந்தோஷம். தொடர்ந்து அவர்களுடன் பணியாற்ற ஆசை. வருண் நடித்த ரோலில் முதலில் நானே அவரை வேண்டாம் என்று சொன்னேன். கரடு முரடான கேரக்டர் ஆனால் கடுமையாக உழைத்து அசத்திவிட்டார். ரியா சுமன் ஜிப்ஸிக்கு ஆடிசன் செய்திருந்ததாக என்னிடம் சொன்னார். ஆனால் அந்தபடம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை இது தான் முதலில் ரிலீஸ் ஆகிறது.
ஜிப்ஸி மற்றும் 83 படங்களுக்காக இந்தியா முழுவதும் பயணித்தபோது, கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் நமது தம்ப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து மகிழ்ந்தேன். நானே பல மொழிகள் பேசிக்கொண்டு நடித்துக் கொண்டிருந்தேன். கதை ஆக்கத்தில் நாம் எல்லோரையும் விட ஒரு படி மேல் தான்…..” என்றார்.