சீறு படத்திலிருந்து வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் விநியோகத் துறையிலும் கால்பதிக்கிறது.
இது குறித்து Dr. ஐசரி K கணேஷ் கூறியபோது, “சீறு, எங்கள் நிறுவனத்தின் 4 வது படம். முதல் மூன்று படங்களுமே அறிமுக இயக்கு நர்கள் தான் இயக்கினார்கள். கதை தான் எங்களைப் பொருத்தவரையில் கதாநாயகன். எங்களது கதை இலாகா தீர்மானிக்கும் படங்களையே தயாரிக்கின்றோம்.
ஜீவாவின் மகன் எங்களது பள்ளியில் படிக்கிறார். பெற்றோர் சந்திப்பிற்கு வந்தபொழுது ஜீவாவிடம் கேட்டிருந்தேன். அவரும் சில மாதங்களுக்குப் பிறகு ரத்ன சிவாவை அனுப்பி வைத்தார். சிலர் சிறப்பாகக் கதை சொல்வார்கள், படம் எடுக்கும் போது ஒன்றும் இருக்காது. சிலருக்குக் கதை சொல்லத் தெரியாது, படம் சிறப்பாக இருக்கும். ஆனால், ரத்ன சிவா, இரண்டிலுமே திறமையானவர். சாக்லேட் பாய் இமேஜை உடைத்திருந்து கரடுமுரடாக நடித்திருக்கிறார் வருண்.
கதையைத் தேர்ந்தெடுத்துவிட்டால், மற்ற அனைத்து விஷயங்களிலும் இயக்குநரே முடிவெடுப்பார். நாங்கள் அவருக்குத் தேவையான விஷயங்களைச் செய்துகொடுப்போம்
சீறு படத்தினைப் பார்த்துவிட்டு நாங்களே விநியோகத்துறையிலும் கால் பதித்திருப்பதே படம் மிகவும் நன்றாக வந்திருப்பதற்குச் சான்று. ஆந்திரா- தெலுங்கானா வில் மட்டுமே 600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறோம்…” என்றார்.