தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வளர்ச்சி, நலன், பாதுகாப்பு ஆகியவற்றை முழக்கங்களாகக் கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி என்று ஒரு அணி களமிறங்கியிருக்கிறது.
2020 – 22 வரையிலான நிர்வாக உறுப்பினர்களுக்காகத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு கருதி, தமிழ் சினிமாவில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து இந்த அணியை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த அணியின் சார்பாக, தலைவர் பதவிக்கு T. சிவா, பொருளாளர் பதவிக்கு K. முரளிதரன் (LMM), செயலாளர் பதவிகளுக்கு பி எல் தேனப்பன் மற்றும் ஜே எஸ் கே சதிஷ்குமார், துணைத்தலைவர் பதவிகளுக்கு ஆர் கே சுரேஷ் மற்றும் ஜி தனஞ்செயன் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக கே.ராஜன், ராதாரவி, கே எஸ் ஸ்ரீனிவாசன், சித்ரா லட்சுமணன், ஹெச் முரளி, எஸ் எஸ் துரைராஜ், கே விஜயகுமார், ஆர்வி உதயகுமார், மனோஜ் குமார், எஸ் நந்தகோபால், மனோபாலா, பாபுகணேஷ், பஞ்சுசுப்பு, எம் எஸ் முருகராஜ், வினோத் குமார், ரங்க நாதன், பஞ்ச் பரத், மதுரை செல்வம் ஆகியோருடன் மேலும் 3 தயாரிப்பாளர்கள் களமிறங்குகிறார்கள்.
திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக திரைப்படங்கள் எடுக்கவும், திரைப்படம் எடுக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழவும் உழைப்பதே தங்கள் அணியின் நோக்கம் என்று திரைப்படத்தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி களம் காண்கிறது.