-K. VijayAnandh
22021 புத்தாண்டின் தொடக்க நாளில் நடைபெற்ற மாயத்திரை படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவில் குஷ்பு சுந்தர், சுஹாசினி மணிரத்னம், தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் முரளி, கதிரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அசோக் குமார், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன், ஜெய் பாலா , காதல் சுகுமார் ஆகியோர் நடிக்க சம்பத்குமார் இப்படத்தின் மூலம் இயக்கு நராக அறிமுகமாகியிருக்கிறார். ஞானக்கரவேல் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள் அருணகிரியும் தமனும்.. 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல முன்னணி நடிகர்களுக்கும் பல வெற்றிப்படங்களுக்கும் ஆடைவடிவமைப்பாளராக இருந்த சாய் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
“1986 ல் நான் நடிகையானதிலிருந்து சாய் இருக்கிறாரா..? அவர் இருந்தால் நான் நடிப்பேன். என்கிற நிபந்தனை விதித்துவிடுவேன்.. அந்தளவிற்கு திறமையும் கண்ணியமுமிக்கவர் சாய்..” என்று குஷ்புவும். “சாய் போன்ற கண்ணியமானவர்கள் எங்களைச் சுற்றி இருந்ததால் தான் என்னைப்போன்றவர்களால் திரைத்துறையில் சாதிக்க முடிந்தது ..” என்று கடந்த டிசம்பர் 2020 உடன் 40 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்திருக்கும் சுஹாசினியும் தயாரிப்பாளர் சாயைப் புகழ்ந்தனர். இப்படத்தை இயக்கியிருக்கும் சம்பத் குமார், திரைப்படக்கல்லூரியில் சுஹாசினியின் ஜூனியர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஷ்புவே 1986 க்குப்பிறகிலிருந்து தான் குறிப்பிட்டார், ஆனால் அதற்கு முன் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹிந்திப்படத்தை நினைவுகூர்ந்து, “ அப்படத்தை பார்த்ததிலிருந்து நான் அவரைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்... அந்தப்பெண்ணை எப்படியாவது காப்பாற்றி பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று என் நண்பர்களிடம் கூறுவேன்..” என்று குஷ்புவை வெட்கப்பட வைத்தார் அசோக் குமார். அதற்காக விழாவில் கலந்துகொண்ட தனது மனைவி சரண்யாவிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது சுவராஸ்யமானதாக அமைந்தது.
இசையுடன், நடனமும் கலந்து Freek -A - Thon என்கிற உடற்பயிற்சி முறையை உருவாக்கி கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா, மலேசியா உட்பட பல்வேறு நாடுகளில் பல ஆயிரம் பேர்களின் ஆரோக்கிய வாழ்விற்கான பங்களிப்பை வழங்கியமைக்காக Malasiya South India Chamber of Commerce என்கிற அமைப்பு அசோக் குமாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அறிவித்திருந்தது. அதனை மாயத்திரை விழா மேடையில் சிறப்பு விருந்தினர்கல் வழங்க அசோக் பெற்றுக் கொண்டார்.
அசோக், தான் பெற்ற இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை நிஜ டாக்ரானா மறைந்த தனது தாத்தாவிற்கும், மறைந்த தனது அப்பாவிற்கும் சமர்ப்பணம் செய்துகொண்டது விழாவின் நெகிழ்வான தருணமாக அமைந்தது.