தமிழ் சினிமாவில் மக்கள்தொடர்பாளராகப் பணியாற்றி வரும் சூர்யாவின் திருமணம் திருச்சியில் நடைபெற்றது. மணமகள் பெயர் அருணா. மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் திருமண நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து மணமக்களை வாழ்த்தினார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன்,செயலாளர் சிவசக்தி பாண்டியன், பிலிம் சேம்பர்த் துணைத்தலைவர் சிவா, பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன் செயற்குழு உறுப்பினர்கள் அழகன் தமிழ்மணி, ஹெச்.முரளி, எடிட்டர் மோகன், இயக்குனர்கள் மனோஜ்குமார், ஹரிராஜன், பவித்ரன், திரு, அழகுசுந்தரம்,பிரசாந்த்,திருமலை,ரவீந்தர் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், துணைத் தலைவர் சாமி நாதன், நடிகர்கள் விவேக், செந்தில், டி.பி.கஜேந்திரன்,வையாபுரி, கம்பம் மீனா, லசியா, வினிதா வினியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், கிளாமர் கிருஷ்ண மூர்த்தி, மூத்த பத்திரிக்கைத் தொடர்பாளர்கள் பெருதுளசி பழனிவேல், மதுரை செல்வம், பாலன், கோவிந்தராஜன்,டைமண்ட் பாபு, மெளனம் ரவி மற்றும் சிங்காரவேலு,ரியாஸ்,வெங்கட்,மேஜர் தாசன், கிளாமர் சத்யா, துரைப்பாண்டி,சிவா, மதி ஒளிகுமார் மற்றும் நாக்ரவி போன்றோர் உட்பட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்,
விழாவிற்கு வந்த சினிமா பிரபலங்களையும் விருந்தினர்களையும் மணமக்கள் சார்பாக பத்திரிக்கைத் தொடர்பாளர் யூனியன் தலைவர் விஜயமுரளி வரவேற்றார்.
மணமக்கள் சூர்யா-அருணா விற்கு மைசிக்ஸர்.காம் தனது திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
[gallery link="file" columns="4"]