புதுவசந்தம், பூவே உனக்காக, சூர்யவம்சம் மற்றும் வானத்தைப்போல போன்ற மிகப்பெரிய வெற்றிப் படங்களை இயக்கிய விக்ரமன் இதோ சில வருட இடைவெளிக்குப் பிறகு “இளமை நாட்கள்” என்கிற திரைப்படத்தினை கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். +2 மாணவ மாணவியர்களை மையமாக வைத்து இயக்கப் போகும் இந்தப்படத்தில் அந்த பருவத்துக்கே உரிய மகிழ்ச்சி,காதல், நட்பு, கோபம் போன்றவற்றை சுவைபடச் சொல்லப் போகிறார். ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை,டெல்லி,தாஜ்மஹால், சண்டிகார் போன்ற பகுதிகளில் நடைபெற இருக்கிறது. பாடல் காட்சிகள் நார்வே மற்றும் ஐஸ்லாண்டில் படமாக்கப்பட உள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகவிருக்கும் இந்தப்படத்தினை செப்டம்பர் 2011 ல் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார்கள்
முற்றிலும் புதிய நடிகர்களைக் கொண்டு இளமை நாட்கள் எடுக்கப்பட இருக்கிறது
முன்னாள்த் திரைப்படக் கல்லூரி மாணவரும் காதல் கோட்டை, கும்மாளம் ஆகியப் படங்களில் பணியாற்றியவருமான கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி இளமை நாட்களையும் தனது கேமராவால் பதிவு செய்ய இருக்கிறார்.
பிரபல இசையமைப்பாளர்களுக்கு கீபோர்டு வாசித்த பால்ராஜ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். புதியவர்களே எடிட்டர் மற்றும் ஆர்ட் டைரக்டர் பணிகளில் அறிமுகப்படுத்தப் பட இருக்கிறார்கள்.
நடிக நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விருப்பமானவர்கள் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மெர்குரி கிரியேஷன்ஸ் K.S. ராஜன் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.