
சட்டப்படி குற்றம் திரைப்பட்த்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்த்து.
விழாவில் இராம நாராயணன், இயக்குனர் ஷங்கர், சீமான், RK செல்வமணி, பேரரசு, வெங்கடேஷ் தயாரிப்பாளர் சிவசக்திபாண்டியன்,VC குகநாதன்,
கலைப்புலி தாணு, எடிட்டர் மோகன், KT குஞ்சுமோன், கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் நடிகர் ஜீவா, மற்றும் சட்டப்படி குற்றம் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகன் சத்யராஜ், விக்ராந்த் ஹரீஷ் கல்யான் நடிகை பானு , ஐஸ்வர்யா, கோமல் சர்மா மற்றும் இயக்குனர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாடல்களை ஷங்கர் வெளியிட ஜீவா பெற்றுக் கொண்டார்.
எதிர்பார்த்த மாதிரியே இந்த விழாவில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் ஈழத்தமிழர்படுகொலை ஆகிய பிரச்சினைகளப் பற்றிய உரைகள் அரங்கேறின.
இதனை முன்னதாகவே எதிர்பார்த்த, தலைமையுரை ஆற்ற வந்திருந்த தயாரிப்பாளர் இராம நாராயணன் கலைஞருக்கு நெருக்கமானவராக இருப்பதால் தலைமையுரையினை சுருக்கமாக ஆற்றி விட்டு முதலிலேயே விடை பெற்றுக் கொண்டார்.
ஆளும் கட்சியின் மீது தாங்கள் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்து விட்டது என்பதனை வெளிப்படையாக அனைவரும் பேசினர். குறிப்பாக 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் மற்றும் ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர் படுகொலைகளைத் தடுக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளின் மீது தங்களது அதிருப்தியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
மார்ச் 25 ஆம் தேதி வெளிவர இருக்கும் சட்டப்படி குற்றம் திரைப்படம் மக்கள் மனதில் விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தி தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகுக்கும் என்கிற தொனியில் அனைவரும் உரையாற்றினார்கள்.
ஊழல் அரசாங்கத்தின் மீதும் தனது உரிமைகளை நிலை நாட்டத்தவறிய அரசின் மீதும் இயக்குனர் சந்திரசேகருக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடு தான் சட்டப்படி குற்றம் திரைப்படம் எனவும் அந்த கோபத்தில் தங்களது பங்கும் சிறு அளவேனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் படத்தில் பணியாற்றியதாகவும் இந்தப் படத்தில் நடித்த, பணியாற்றிய அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தனர்.
இளையதளபதி விஜய் வராதபோதிலும் பெரும்திரளாக வந்திருந்த விஜயின் ரசிகர்கள் அவரது பெயர் உச்சரிக்கப்பட்ட போதெல்லாம் கைதட்டி பெருத்த ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்.
முன்னதாக ஷோபனா சந்திரசேகர் மற்றும் சங்கீதா விஜய் குத்து விளக்கேற்றி விழாவினைத் துவக்கி வைத்தனர். சிறப்பாக நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிய லிவிங்ஸ்டன் அனைவராலும் பாரட்டப்பட்டார்.